மந்திர வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. எந்த அளவிற்கு நாம் தெய்வத்தை வழிபாடு செய்கிறோமோ அதே அளவிற்கு தான் மந்திரத்தை உச்சரித்தும் வழிபாடு செய்கிறோம். எளிமையான மந்திரங்களும் பல இருக்கின்றன. அதே சமயம் சூட்சமமான ரகசியமான மந்திரங்களும் பல இருக்கின்றன. எந்த பிரச்சினைக்கு எந்த தெய்வத்தை எந்த மந்திரத்தை கூறி வழிபட வேண்டும் என்பதை உணர்ந்தால்தான் இந்த மந்திர வழிபாட்டில் நம்மால் வெற்றிகளை பெற முடியும். அப்படிப்பட்ட ஒரு மந்திர வழிபாட்டை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பணத்திற்கு அதிபதியாக திகழக் கூடியவர்கள் மகாலட்சுமி தாயாரும் குபேர பகவானும். குபேர பகவானின் அருள் இருந்தால்தான் மகாலட்சுமி தாயார் கொடுக்கும் செல்வம் நம்மிடம் தங்கும். அப்படிப்பட்ட குபேர பகவானின் அருளை பரிபூரணமாக பெறவும் பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகள் தீரவும் செய்யக்கூடிய ஒரு எளிமையான மந்திர வழிபாட்டை தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இந்த வழிபாட்டை குபேர பகவானுக்குரிய கிழமையான வியாழக்கிழமை அன்று தொடங்குவது மிகவும் சிறப்பு அல்லது வெள்ளிக்கிழமையோ, பௌர்ணமி தினங்களிலோ இந்த வழிபாட்டை செய்ய ஆரம்பிக்கலாம். தொடர்ந்தது 90 நாட்கள் ஆவது இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும். இதற்காக தனியாக நாம் எதுவும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும், சாமி கும்பிட வேண்டும், இந்த பூஜை செய்ய வேண்டும், அந்த பரிகாரம் செய்ய வேண்டும், இந்த வழிபாடு செய்ய வேண்டும் என்று எதுவுமே கிடையாது.
நாம் அனைத்து வேலைகளையும் செய்து முடித்துவிட்டு இரவில் படுக்க செல்வோம் அல்லவா? அவ்வாறு படுக்கும் பொழுது படுப்பதற்கு முன்பாக அமர்ந்து இந்த மந்திரத்தை ஆறு முறை கூறிவிட்டு அப்படியே படுத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் என்ன நடக்கும்? நமக்கு வரக்கூடிய வருமானம் என்பது அதிகரிக்கும். அந்த வருமானம் அதிகரிப்பதற்குரிய வழிவகைகள் நமக்கு கிடைக்கும். வராத கடனும் வந்து சேரும். கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். இப்படி பல பணரீதியான விஷயங்கள் நமக்கு நடக்கும்.
மந்திரம்
ஓம் ஸ்ரீம் கிலீம் விட்டேஷ்வராய நமஹ
ஒருவரி மந்திரமான இந்த மந்திரத்தை தொடர்ந்து ஆறு முறை கூறிவிட்டு படுத்து உறங்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 90 நாட்களோ அல்லது நம்முடைய வாழ்நாள் முழுவதுமோ இந்த மந்திரத்தை கூறி வருவதன் மூலம் நம்முடைய வாழ்நாள் முழுவதும் குபேர பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து செல்வ செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் நீங்க முருகன் மந்திரம்
மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை முழு மனதோடு எந்தவித தடங்களும் இல்லாமல் தடைகளும் இல்லாமல் கூறிக்கொண்டே இருப்பவர்களுக்கு குபேர பகவானின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும்.