- Advertisement -

இன்று வளர்பிறை வெள்ளிக்கிழமை மகாலட்சுமி மந்திரம்

- Advertisement -

தங்க நகைகளையும், செல்வ வளத்தையும், கொட்டி கிடக்கும் பணத்தையும், உங்கள் வீட்டில் காண வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால், இன்றைய தினம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் உங்கள் வீட்டு பூஜை அறையில், ஏற்றி வைத்திருக்கும் விளக்கை பார்த்து மகாலட்சுமியை மனம் உருகி வேண்டி, நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். வீட்டில் இருக்கும் வறுமையானது ஒரு நொடி பொழுதில் விலகி, வீட்டிற்குள் செல்வ வளமும், ஐஸ்வர்யமும் கொட்ட துவங்கிவிடும்.

பிறகு மலை போல் பணம் குவியும். தேவைக்கு அதிகமாக தங்கம் வாங்கும் யோகமும் கிட்டும். பொருளாதாரத்தில் நீங்கள் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள். செல்வந்தர்களாக மாறுவீர்கள். இந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லும் போதும் கேட்கும் போதும், வெள்ளிக்கிழமை தினமான இன்று மனதிற்கு அத்தனை சந்தோஷம் வருகிறது. சந்தோஷத்தோடு பதிவிற்குள் பயணம் செய்வோம்.

- Advertisement -

எல்லோர் வீட்டிலும் இன்று மகாலட்சுமிக்கான சிறப்பு பூஜை நடைபெறும். இப்போது மாலை நேரம்மணி 6:00 ஆகிவிட்டது. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்திருப்பீர்கள். பூஜை அறைக்கு சென்று மகாலட்சுமியை பார்த்து இந்த மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். எனக்கு நிச்சயம் பணம் வரும். நான் நிறைய தங்க நகை வாங்குவேன். சீக்கிரம் சொந்த வீடு கட்டுவேன்.

பணம் சேர்ப்பேன், நகை சேர்ப்பேன், என்று முழு மனதோடு நம்பி பாசிட்டிவ் எனர்ஜியோடு மந்திரத்தை படிக்க வேண்டும். அதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். இந்த மந்திரத்தை படித்தால் உங்களுக்கு மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் கிடைத்துவிடும் அதில் ஒரு துளி சந்தேகமும் இல்லை.

- Advertisement -

மகாலட்சுமி மந்திரம்

ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே!
ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ!

இரண்டே வரி மந்திரம் தான். படிக்க தவறி விடாதீர்கள். இன்றைய தினம் இந்த மந்திரத்தை படித்துவிட்டு அப்படியே விடக்கூடாது. தினமும் காலையும், மாலையும், பூஜை அறையில் விளக்கு ஏற்றுவீர்கள் அல்லவா. அந்த சமயம் மகாலட்சுமியை நம்பி மேலே சொன்ன அத்தனை விஷயங்களையும் மனதில் வைத்து, வழிபட்டால் எல்லா நன்மைகளும் உங்களுக்கு நடக்கும். இந்த மந்திரத்தை சொல்ல துவங்கிப் பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: எதிரி தொல்லை விலக நரசிம்மர் வழிபாடு

48 நாட்களில் உங்களுடைய பெரிய பெரிய பண பிரச்சனைகள் தீர்வதற்கு, உண்டான வழியை அந்த கடவுள் நிச்சயம் காண்பித்துக் கொடுப்பார். மகாலட்சுமியே எந்த அளவுக்கு நம்பி வழிபாடு செய்கின்றோமோ, அந்த அளவுக்கு பலன் உண்டு. நம்பாமல் நானும் விளக்கேற்றினேன், நானும் வெள்ளிக்கிழமை பூஜை செய்தேன் என்று சொன்னால் நிச்சயம் எதுவுமே நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. மேலே சொன்ன இந்த தகவல் நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -