- Advertisement -

குடும்ப கஷ்டம் நீங்க வாராஹி வழிபாடு

- Advertisement -

அஷ்டலட்சுமிகளின் ஒட்டுமொத்த சொரூபம் வாராகி அன்னை என்று சொல்லலாம். உங்களுடைய குடும்பத்தில் எவ்வளவு பெரிய கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும், அதை சரி செய்ய ஆடி செவ்வாய்க்கிழமை வாராஹியை எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

ஆடி மாதம் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. இதற்குள் ஒரே ஒரு ஆடி செவ்வாய்க்கிழமையாவது இந்த வழிபாட்டை தவறாமல் மேற்கொள்ளவும். இந்த வழிபாட்டை வீட்டில் இருக்கும் வாராஹி அன்னையின் சிலைக்கும் செய்யலாம். வீட்டில் வாராஹியின் சிலை இல்லை என்பவர்கள் கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

- Advertisement -

ஆடிச் செவ்வாய் வாராஹி வழிபாடு

ஆடி மாதம் எல்லா அம்பாள் கோவில்களிலும் விசேஷமாக இருக்கும். அப்படித்தான் வாராஹி இருக்கக்கூடிய கோவிலிலும் அபிஷேக ஆராதனைகள், ஆடி மாதத்தில் சிறப்பாக நடக்கும். செவ்வாய்க்கிழமை வாராஹிக்கு அபிஷேகம் செய்ய மஞ்சள் பொடியை வாங்கி தானம் கொடுக்க வேண்டும். குருக்களிடம் சுத்தமான மஞ்சள் தூள் வாங்கி கொடுத்து அதை செவ்வாய்க்கிழமை, வாராஹி அபிஷேகத்திற்கு பயன்படுத்தும் படி சொல்லி விடுங்கள்.

நீங்கள் அந்த வாராஹி அன்னையின் முன்பாக அமர்ந்து, செவ்வாய்க்கிழமையில் மஞ்சள் பொடி அபிஷேகத்தை கண்குளிர பார்த்தால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் தீரும் என்பது நம்பிக்கை. அதேபோல வாராஹிக்கு கருப்பு உளுந்தால் வடை செய்து வழிபாடு செய்தால், குடும்பத்தில் இருக்கும் கடன் சுமை குறையும்.

- Advertisement -

குறிப்பாக செவ்வாய் கிழமை கருப்பு உளுந்தால் செய்யப்பட்ட வடையை வாராஹித்து நெய்வைத்தியமாக வைத்து வழிபாடு செய்து, அதை நீங்கள் அன்னதானமாக கொடுக்க வேண்டும். இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் போது 9 அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடை செய்தால், நவகிரகங்களின் அனுக்கிரகமும் உங்களுக்கு கிடைத்துவிடும்.

நீங்கள் கோவிலுக்கு செல்லவில்லை வீட்டிலேயே வாராஹி சிலை உள்ளது. ஆடிச் செவ்வாய் இந்த வழிபாட்டை வீட்டில் செய்ய முடியும் என்பவர்கள், மஞ்சள் தூளால் வாராகி அம்மைக்கு உங்கள் கையாலேயே அபிஷேகம் செய்து, கருப்பு உளுந்து வடை நெய்வேத்தியம் வைத்து, வீட்டிலேயே 9 விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம். தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: பண கவலை தீர பரிகாரம்

ஆனால் நைய்வேத்தியமாக வைத்த வடையை இரண்டு பேருக்கும் தானம் கொடுப்பதன் மூலம் தான் முழுமையான பலனை பெற முடியும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த வாராஹி வழிபாட்டை செய்து பாருங்கள். ஒருவேளை ஆடிச் செவ்வாய் இந்த வழிபாட்டை செய்ய தவற விட்டால் வாராகிக்குரிய பஞ்சமி திதியில் இந்த வழிபாட்டை செய்வதும் குடும்ப கஷ்டத்தை தீர்க்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -