- Advertisement -

கெட்ட சக்திகளை விரட்டியடிக்கும் வாராகி தீப வழிபாடு

- Advertisement -

நாம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நம் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அந்த குடும்பமே பாதிக்கப்படும். அதனால்தான் பலரும் தங்களுடைய குடும்பம் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து வழிபாடு செய்வார்கள். அதிலும் குறிப்பாக குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்கள் தங்களின் சுயநலத்திற்காக வணங்காமல் தன் குடும்பத்தில் இருக்கும் நபர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பல விரதங்களையும் வழிபாட்டு முறைகளையும் மேற்கொள்வார்கள். அந்த வகையில் குடும்பத்தில் இருக்கக்கூடிய தீய சக்திகள் விலகுவதற்கு சனிக்கிழமை அன்று வாராகி அம்மனை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எதிரிகளை ஓட ஓட விரட்டக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவள் தான் வாராகி அம்மன். மேலும் வெற்றியை வாரி வழங்கக்கூடிய தெய்வமாகவும் வாராகி அம்மன் திகழ்கிறார். இதில் எதிரிகள் என்று பார்க்கும் பொழுது கண்ணுக்கு தெரிந்த, கண்ணுக்குத் தெரியாத எப்பேர்ப்பட்ட எதிரியாக இருந்தாலும் அந்த எதிரியின் பாதிப்பில் இருந்து விலகுவதற்கும் அந்த எதிரிகள் மீண்டும் நமக்கு எந்த பிரச்சினையும் தராமல் இருப்பதற்கும் கண்டிப்பான முறையில் வாராகி அம்மனின் அருள் வேண்டும். அப்படி வாராகி அம்மனின் அருளை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு தீப வழிபாட்டை தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை சனிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். காலை 6:00 மணியிலிருந்து 7 மணிக்குள்ளோ அல்லது இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளோ இந்த தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம். இந்த தீபத்தை வீட்டிலேயும் ஏற்றலாம். அதேசமயம் வாராகி அம்மனின் ஆலயம் இருக்கும் பட்சத்தில் அங்கேயும் சென்று ஏற்றலாம்.. இதற்காக புதிதாக ஒரு அகல் விளக்கு ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். ஆலயத்தில் ஏற்றுவர்களாக இருந்தால் ஒவ்வொரு வாரமும் புதிதாக அகல் விளக்கை வாங்க வேண்டும். வீட்டில் ஏற்றுப்பவர்களாக இருந்தால் முதல் வாரம் மட்டும் புதிய விளக்கை வாங்கிக் கொள்ளலாம் மற்ற வாரங்களில் அந்த விளக்கையே திரும்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

அடுத்ததாக இதற்கு கருநீல துணி வேண்டும். வெண்கடுகு வேண்டும். கருநீலத் துணியை சதுர வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள். அதற்கு நடுவில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெண்கடுகை வைத்து மூட்டையாக கட்டி அகல் விளக்கில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபத்தை ஏற்ற வேண்டும். எப்படி நாம் சனிக்கிழமையில் சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வோமோ அதே போல் வாராகி அம்மனுக்கு வெண்கடுகு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்படி தொடர்ச்சியாக 8 வாரங்கள் நாம் சனிக்கிழமை தோறும் வாராகி அம்மனை நினைத்து வாராகி அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தோம் என்றால் வாராகி அம்மனின் அருளால் நமக்கு எப்பேற்பட்ட தீய சக்திகளால் எப்பேர்ப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும் அந்த பாதிப்புகள் விலகுவதோடு மறுபடியும் தீய சக்திகள் நம்மை அண்டாத அளவிற்கு வாராகி அம்மன் காத்து ரட்சிப்பார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தம்பதிகள் ஒற்றுமை அதிகரிக்க தீபம் ஏற்றும் முறை

இந்த எளிமையான தீப வழிபாட்டை வாராகி அம்மனின் மீது முழு நம்பிக்கை வைத்து முழு மனதுடன் செய்பவர்களுக்கு வாராகி அம்மனின் அருளால் எதிர்மறை ஆற்றல்களும் எதிரிகள் தொல்லையும் முற்றிலும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

- Advertisement -