
மனித உடலும் மிருக தலையும் கொண்டிருக்க கூடிய தெய்வத்தினை வழிபாடு செய்தால், நம்முடைய துன்பங்கள் விரைவாக விலகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் பார்த்தால் மனித உடலும் மிருகத் தலையும் சேர்ந்த அவதாரம் தான் வாராஹி அன்னை. வாராஹிக்கு உகந்த திதிகள் என்றால் அது பஞ்சமி திதி. ஒன்று வளர்பிறை பஞ்சமி திதி, இன்னொன்று தேய்பிறை பஞ்சமி திதி.
இன்றைய தினம் 17.5.2025 தேய்பிறை பஞ்சமி திதியானது வந்திருக்கிறது. இந்த நாளில் வாரஹியை எப்படி வழிபாடு செய்தால் தீராத கண் திருஷ்டி, கடன், எதிரி தொல்லையில் இருந்து விடுபட முடியும். ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
இன்றைய தினம் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வாராஹியை தீபச்சுடரில் ஆவாகனம் செய்து வீட்டிலிருந்தபடியே வழிபாடு செய்யலாம். இந்த வழிபாட்டிற்கு உங்களுடைய வீட்டில் கட்டாயம் வாராகியின் திரு உருவப்படும் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. வாராஹிம் திருவுருவப்படம் இருந்தால் அதற்கு முறையான பூஜைகளையும் நெய்வேதியத்தையும் வைத்துவிட்டு பின் சொல்லக்கூடிய பாடலை படிக்கவும்.
உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் சுமை, எதிரி தொல்லை விலக வேண்டும் என்று வாராகியை மனம் உருகி வேண்டுதல் வையுங்கள். பூஜை அறையில் இருக்கும் தீபத்தை பார்த்து இந்த வேண்டுதலை நீங்கள் வைக்கலாம். அதன் பிறகு வாராகி மாலை இன்றைய தினம் படிப்பது மிக மிக சிறப்பு. இதில் மொத்தமாக 32 பாடல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த பாடல் தமிழில் தான் இருக்கும்.
எளிமையாக படிக்கின்ற வகையில் இருக்கும். உங்களால் முடிந்தால் 32 பாடல்களையும் முழுமையாக படித்து பலன் பெறலாம். முடியாது என்பவர்கள் வாராகியினுடைய வருகையை சொல்லக்கூடிய இந்த ஒரு பாடலை மட்டும் படியுங்கள். வாராகி உங்கள் துன்பத்தை தீர்த்து வைக்க ஏதாவது ஒரு ரூபத்தில் நிச்சயம் உங்களுக்கு காட்சி கொடுப்பாள். இன்றைய தினம் நீங்கள் படிக்க வேண்டிய அந்த பாடல் வரிகள் இதோ உங்களுக்காக.
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழித்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் தவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே.
இதையும் படிக்கலாமே: எதிர்மறை ஆற்றலை விரட்டும் வாராகி மந்திரம்
இவ்வளவு தான். இந்த நான்கு வரி பாடல்களும் உங்களுக்கு படிப்பதற்கு சௌகரியமாக இருக்க வேண்டும் என்ற வகையில், வாராகி மாலையில் இருந்து எடுத்து தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு உள்ளவர்கள் இன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, இந்த பாடலை படித்து, வாராகியை வேண்டினால் நிச்சயம் நல்லது நடக்கும். உங்கள் கடன் சுமை குறையும். எதிரி தொல்லை நீங்கும். வராகி ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை காட்டி தருவாள் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.