- Advertisement -
Homeமந்திரம்எதிர்மறை ஆற்றலை விரட்டும் வாராகி மந்திரம்

எதிர்மறை ஆற்றலை விரட்டும் வாராகி மந்திரம்

- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஏதாவது ரூபத்தில் எதிரிகள் என்று யாராவது ஒருத்தர் இருப்பார்கள். அதே போல் தான் துரோகிகளும் இருப்பார்கள். இதோடு மட்டுமல்லாமல் எதிர்மறை ஆற்றல்கள் என்று கூறக்கூடிய கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம் போன்ற அனைத்துமே இருக்கத்தான் செய்யும். அதிலிருந்து வெளியே வந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதோடு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் பெற வேண்டும் என்றால் கண்டிப்பான முறையில் உக்கிர தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் வாராகி அம்மனின் வழிபாடு மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. இந்த மந்திரம் குறித்த பதிவில் வாராகி அம்மனின் எந்த மந்திரத்தை கூறினால் எதிர்மறை ஆற்றல்கள் விலகும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

எதிர்மறை ஆற்றலை விரட்டும் மந்திரம்

வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக கருதப்படுவது பஞ்சமி திதி என்று நம் அனைவருக்கும் தெரியும். பஞ்சமி திதி அன்று நாம் வாராகி அம்மனை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்றும் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்றும் கூறப்படுகிறது. அப்படி நாம் வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு பல விதங்கள் இருக்கின்றன. ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது, வீட்டிலேயே வழிபாடு செய்வது, தீபம் ஏற்றி வழிபாடு செய்வது என்று கூறிக்கொண்டே செல்லலாம். அந்த வகையில் மந்திர வழிபாடும் ஒரு வழிபாடாகவே திகழ்கிறது.

- Advertisement -

வாராகி அம்மனுக்கு பலவிதமான மந்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் என்பது இருக்கும். நமக்கு என்ன வேண்டுமோ அது கிடைப்பதற்கு எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பதை உணர்ந்து உச்சரித்தோம் என்றால் கண்டிப்பான முறையில் அது நமக்கு கிடைக்கும். அந்த வகையில் எதிர்மறை ஆற்றல் நீங்கவும் எதிரிகள் மற்றும் துரோகிகள் நம்மை விட்டு விலகிச் செல்லவும் பஞ்சமி தினத்தன்று செய்ய வேண்டிய ஒரு மந்திர வழிபாடு இருக்கிறது.

ஒரு சிவப்பு நிற பேனாவை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வெள்ளை நிற பேப்பரில் பின்வரும் வாராகி அம்மனின் இந்த மந்திரத்தை 27 முறை எழுத வேண்டும். பிறகு ஏதாவது ஒரு இனிப்பு அல்லது தானியத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து எறும்புகள் சாப்பிடும் படி போட வேண்டும். அடுத்ததாக ராஜராஜ சோழன் வழிபட்ட வாராகி அம்மனை மனதார நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை 27 முறை கூற வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் வம் வராகியே நம”

இதையும் படிக்கலாமே:செல்வத்தை வாரி வழங்கும் விநாயகர் மந்திரம்

வாராகி அம்மனின் இந்த ஒரு வரி மந்திரத்தை யார் ஒருவர் தொடர்ச்சியாக ஒவ்வொரு பஞ்சமி திதியிலும் கூறி வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு வாராகி அம்மனின் அருளால் எதிரிகளோ துரோகிகளோ இருக்கவே மாட்டார்கள். மேலும் அவர்களிடம் எந்த விதமான எதிர்மறை ஆற்றல்களும் நெருங்காது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்