- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

வரலட்சுமி விரதத்தன்று ஏற்ற வேண்டிய தீபங்கள்

- Advertisement -

வரலட்சுமி விரதம் என்பது மிகவும் முக்கியமான விரதமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் சுமங்கலி பெண்கள் பலரும் மகாலட்சுமி தாயாருக்கு வழிபாடு செய்வார்கள். பரம்பரை பரம்பரையாக முன்னோர்கள் தொடங்கிய வழிபாட்டை இன்றளவும் பின்தொடர்ந்து பலரும் தங்களுடைய இல்லத்தில் கலசம் வைத்து மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதும் உண்டு. புதிதாக விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். விரதம் இருக்காமல் வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி யாராக இருந்தாலும் நாளைய தினம் வரக்கூடிய வரலட்சுமி விரதத்தன்று ஏற்ற வேண்டிய தீபங்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக ஒவ்வொரு பூஜையிலும் தீபத்திற்கு என்று முக்கியத்துவம் இருக்கிறது. எந்த பூஜையை நாம் செய்வதாக இருந்தாலும் கண்டிப்பான முறையில் ஏதாவது ஒரு தீபத்தையாவது ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அப்படி தீபம் ஏற்றாமல் செய்யக்கூடிய வழிபாட்டால் எந்தவித பலனும் கிடைக்காது என்றே கூறலாம். நாளைய தினம் எந்த தீபத்தை ஏற்று வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் பார்க்க போகிறோம்.

- Advertisement -

பொதுவாக வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் தங்களுடைய வீட்டில் குத்துவிளக்கு தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அதோடு சேர்த்து இன்னும் சில தீபங்களை நாம் ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது நமக்கு பல பிரச்சினைகள் தீரும். அதில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் உப்பு தீபம்.

வரலட்சுமி விரதத்தன்று ஒரு சிறிய வாழை இலையை விரித்து அதற்கு மேல் ஒரு பெரிய அகல் விளக்கை வைத்து அது நிறைய கல்லுப்பை சேர்த்து அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு மகாலட்சுமி தாயாரை நினைத்து தீபம் ஏற்ற வேண்டும். இப்படி நாளைய தினம் உப்பு தீபம் ஏற்றி வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் ரீதியான அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதற்கு அடுத்தார் போல் மகாலட்சுமி தாயாரின் அம்சம் பொருந்திய மருதாணி இலை தீபம். ஒரு சிறிய தாம்பாள தட்டில் மருதாணி இலையைப் பரப்பி அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி நாம் மருதாணி இலை தீபம் ஏற்றும் பொழுது மகாலட்சுமி தாயாரின் அருளால் பணவரவு அதிகரிக்கும்.

மூன்றாவதாக நாம் ஏற்றக்கூடிய மிகவும் முக்கியமான தீபம் நெல்லிக்காய் தீபம். நெல்லிக்கனி என்பது தேவலோக கனியாக திகழ்கிறது. மேலும் நெல்லிக்கனியில் மகாலட்சுமி தாயார் வீற்றிருக்கிறார் என்பதால் நாளைய தினம் வரக்கூடிய வரலட்சுமி விரதத்தன்று இரண்டு நெல்லிக்காயை வைத்து அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய இழந்த அனைத்து விதமான செல்வங்களையும் திரும்பப் பெற்று சீரும் சிறப்புடன் வாழ்வோம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் வெற்றிலை தீபம் ஏற்றுவதும், வேப்ப இலை தீபம் ஏற்றுவதும் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. வெற்றிலை தீபம் ஏற்றி நாம் வழிபடும் பொழுது நாம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும் என்றும், வேப்பிலை தீபம் ஏற்றி வழிபடும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே எளிமையாக வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் முறை

விரதம் இருந்து, பூஜை செய்து, வழிபாடு செய்ய இயலாதவர்கள் கூட இந்த முறையில் தீபமேற்றி வழிபாடு செய்ய அவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருளால் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.

- Advertisement -