
நாளைய தினம் ஆடி மாதம் கடைசி வெள்ளி. வரலட்சுமி விரதமும் சேர்த்து வரவிருக்கின்றது. இந்த நேர்மறை ஆற்றல் நிறைந்த நாளில், வீட்டில் இருக்கும் பெண்கள் எந்தெந்த விஷயங்களில் எல்லாம் செய்ய வேண்டும், எந்தெந்த விஷயங்களை எல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
வீட்டில் இருக்கும் பெரியவர்கள் உங்களுக்கு இந்த விஷயங்களை எல்லாம் சொல்லி இருக்கலாம். இருந்தாலும், வீட்டில் பெரியவர்கள் இல்லை, வழிபாட்டு முறைகளை பற்றி தெரியாத சில பெண்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த ஆன்மீகம் குறிப்புகள் நிச்சயம் பயன்படும்.
பண்டிகை நாளில் செய்யக்கூடாத விஷயங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ, அதே அளவுக்கு பண்டிகை நாட்களில் செய்யக்கூடிய விஷயங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். முதலில் என்னென்ன விஷயங்களை எல்லாம் நாளை செய்ய வேண்டும் என்று பார்த்து விடுவோம். பிறகு நாளை செய்யக்கூடாத விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
வரலட்சுமி நோன்பு அன்று வீட்டில் காலை நேரமும் மாலை நேரமும் கட்டாயம் விளக்கு ஏற்ற வேண்டும்.
வீட்டில் இருக்கும் பெண்கள் நெற்றியில் குங்குமப்பொட்டு, திருமணம் ஆன பெண்கள் வகுட்டில் குங்கும பொட்டு, தலையில் பூ வைத்துக்கொண்டு தான் இருக்க வேண்டும்.
வீட்டு பக்கத்தில் இருக்கும் ஏதாவது அம்மன் கோவிலுக்கு, கணவன் மனைவி ஒன்றாக சேர்ந்து இருவரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அம்பாள் கோவிலில் கொடுக்கும் திலகத்தை கோவிலிலேயே அமர்ந்தபடி கணவன், மனைவியின் நெற்றிக்கும், திருமாங்கல்யத்திற்கும் இடுவது ரொம்ப ரொம்ப நல்லது. உங்களுடைய வீட்டில் இந்த வரலட்சுமி வழிபாடு செய்யவில்லை என்றாலும், இந்த ஒரு வழிபாட்டை மட்டுமாவது கோவிலுக்கு சென்று செய்யவும்.
உங்களால் இயன்ற மங்களப் பொருட்களை வாங்கி ஒரே ஒரு பெண்ணுக்காவது தானம் கொடுக்கலாம். மஞ்சள் குங்குமம், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், கண்ணாடி வளையல், இப்படி ஏதாவது ஒரு பொருளை வாங்கி தானம் செய்வது சிறப்பு. இது வீட்டில் சுபகாரியத் தடைகளை நீக்கும்.
உங்கள் வீட்டில் வரலட்சுமி வழிபாடு செய்யும் பழக்கமே இல்லை என்றாலும் சரி பூஜை அறையில் விளக்கு ஏற்றி, மகாலட்சுமிக்கு ஏதாவது ஒரு நைய் வைத்தியம் வைத்து கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும்.
வரலட்சுமி விரதத்தன்று வீட்டை மாப் போட்டோ, அல்லது கழுவி துடைக்க கூடாது. ஒட்டடை அடிக்கக் கூடாது. பூஜை அறையை சுத்தம் செய்யக்கூடாது. முந்தைய நாளே இந்த வேலைகளை எல்லாம் முடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
வீட்டுப் பெண்கள் மாதவிலக்கு ஆகி இருந்தாலும், கணவரையோ அல்லது வேறு யாராவது ஒருவரையோ வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றவும். இன்று உங்களுடைய வீட்டில் விளக்கு ஏற்றாமல் இருக்கக் கூடாது.
பூஜை முடித்துவிட்டு, கோவிலுக்கு சென்று வந்த பிறகு கூட, வரலட்சுமி விரதத்தன்று அசைவம் சாப்பிடக்கூடாது.
இன்று யாரிடமும் கைநீட்டி கடன் வாங்க கூடாது. கடன் கொடுக்கவும் கூடாது. ரொம்ப ரொம்ப அவசரம் மருத்துவ செலவு அல்லது வேறு ஏதாவது அவச பிரச்சினையாக இருந்தால் மட்டும் அதற்கு இந்த குறிப்பு விதிவிலக்கு.
நாளைய தினம் வீட்டில் இருக்கும் நகைகளை கொண்டு போய் அடகு வைக்க கூடாது. தங்க நகைகளை யாருக்கும் இரவலாகவும் கொடுக்கக் கூடாது.
நாளைக்கு வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களை வெறும் கையோடு அனுப்பக் கூடாது. உங்களால் முடிந்த மங்களப் பொருட்களை அவர்கள் கையில் கொடுத்து அனுப்ப வேண்டும். நாளை வீட்டிற்கு வந்த சுமங்கலி பெண்களை வீட்டில் இருந்து எதுவும் சாப்பிடாமல் வெளியில் அனுப்பக்கூடாது. 1 டம்ளர் தண்ணீராவது கொடுக்கணும்.
இதையும் படிக்கலாமே: ஆடி கடைசி வெள்ளி மகாலட்சுமி வழிபாடு
நெற்றியில் இட்டுக் கொள்ள குங்குமம் கட்டாயம் கொடுக்கணும். வீட்டில் எந்த மங்கல பொருட்களும் கொடுப்பதற்கு இல்லை என்றால், குங்குமம் பூ மட்டும் கொடுத்தாலும் போதும். நாளைய தினம் வயது முதிர்ந்த தம்பதி சரீரமாக இருக்கக்கூடிய பெரியவர்களின் காலில் விழுந்த ஆசீர்வாதம் வாங்குவது நல்லது.