- Advertisement -

வருமானத்தை பெருக்கும் அஷ்டமி பரிகாரம்

- Advertisement -

எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர் கால பைரவர். காலங்களை நிர்ணயிக்கக்கூடிய சக்தி மிகுந்தவராகவும் இவர் திகழ்கிறார். சித்தர்கள் அனைவருக்கும் சித்தராக திகழக்கூடியவராகவும், முடிக்கவே முடியாது என்று நினைக்கக்கூடிய செயலை முடித்து வைக்கும் ஆற்றல் மிக்கவராகவும் திகழ்பவர் தான் கால பைரவர். அப்படிப்பட்ட காலபைரவரை நாம் எந்த வேண்டுதலுக்காக வேண்டுமானாலும் வழிபாடு செய்யலாம். அதிலும் குறிப்பாக அவருக்குரிய திதியான அஷ்டமி திதியில் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வேண்டுதல்கள் அனைத்துமே நிறைவேறும். அந்த வகையில் வருமானம் பெருகுவதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

வருமானத்தை பெருக்கும் பரிகாரம்

நாம் அனைவரும் நம்முடைய விடாமுயற்சியின் பலனாலும், கடினமான உழைப்பாலும் பணத்தை சம்பாதிக்கிறோம். ஒரு சிலருக்கு மட்டும் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அந்த உழைப்பிற்கு ஏற்ற பணம் வராமல் இருக்கும். எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த முயற்சியில் தடைகள் ஏற்பட்டு இருக்கும். இவை அனைத்தும் நீங்கி வருமானம் அதிகரிப்பதற்கு வளர்பிறை அஷ்டமி திதி அன்று இரவு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வளர்பிறை அஷ்டமி திதியில் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. தேய்பிறை அஷ்டமி திதியிலும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மாதத்திற்கு ஒருமுறை ஏதாவது ஒரு அஷ்டமியில் இந்த பரிகாரத்தை தொடர்ச்சியாக செய்வதன் மூலம் நமக்கு வருமானத்தில் இருக்கக்கூடிய தடைகள் விலகும். இதற்கு நமக்கு மிளகு மட்டும் இருந்தால் போதும். 48 எண்ணிக்கையில் மிளகை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கருப்பு நிற துணியில் இந்த மிளகை போட்டு அதை கருப்பு நிற நூலால் மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள்.

அஷ்டமி அன்று இரவு வீட்டில் இருக்கக்கூடிய யாராவது ஒருவர் இந்த மூட்டையை தங்களுடைய தலையணைக்கு கீழ் வைத்து படுத்து உறங்க வேண்டும். மறுநாள் காலையில் அதை எடுத்து கால் படாத இடத்தில் அல்லது ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும். இப்படி தொடர்ச்சியாக மாதத்திற்கு ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறைகள் அனைத்தும் விலகி வருமானம் பெருகுவதற்குரிய வாய்ப்புகள் வந்து சேரும். நம்முடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். முக்கிய குறிப்பு குடும்பத்தில் இருக்கக்கூடிய யாராவது ஒருவர் மட்டும் இந்த பரிகாரத்தை செய்தால் போதும். அனைவரும் செய்ய வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:நோய் தீர்க்கும் மஞ்சள் பரிகாரம்

கால பைரவருக்கு உகந்த மிளகை வைத்து அஷ்டமி அன்று இரவு இந்த முறையில் பரிகாரம் செய்ய வருமானம் பெருகுவதற்குரிய வாய்ப்புகள் வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -