கோடை காலமோ, குளிர்காலமோ கடுமையான வெயில் தாக்கினாலும், குளிர்கால நோய்கள் நம்மை நெருங்கினாலும் அதிலிருந்து விடுவிக்கக்கூடிய எளிய பரிகாரம் இதுவாகும். அம்பாளுக்கு செய்யும் இந்த பரிகாரம் 48 நாட்கள் தொடர்ந்து செய்தால், எப்பேர்பட்ட நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. நோய்கள் தீருவதற்கு, நோய்கள் வராமல் இருப்பதற்கு அம்பாளுக்கு செய்ய வேண்டிய மஞ்சள் பரிகாரத்தை எப்படி செய்யலாம்? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவலை இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
மஞ்சளில் நிறைய வகைகள் உண்டு. அதில் இந்த பரிகாரத்திற்கு தேவையான மஞ்சள், விரலி மஞ்சள் ஆகும். விரலி மஞ்சள் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது. பொதுவாகவே மஞ்சள் கிருமி நாசினியாக இருக்கிறது. மஞ்சள் நோய்களை குணமாக்கக்கூடிய மூலிகையாகவும் விளங்குகிறது. மஞ்சள் மகாலட்சுமியின் அம்சம். இந்த விரலி மஞ்சள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
தினமும் காலையில் குளித்து முடித்த பின்பு ஒரு விரலி மஞ்சளை பூஜை அறையில் அம்பாள் படத்திற்கு முன்பாக வைத்து விளக்கு ஏற்றி பூஜை செய்யுங்கள். 48 நாட்கள் தினமும் இது போல அம்பாளுக்கு விளக்கு ஏற்றி வைத்து மஞ்சள் வைத்து வர வேண்டும். 48 நாட்களில் 48 விரலி மஞ்சள்கள் சேரும். 48 விரலி மஞ்சள் கிழங்குகள் சேர்ந்ததும், 48 ஆவது நாள் அந்த மஞ்சளை மாலையாக கோர்த்துக் கொள்ளுங்கள். மஞ்சள் நிற நூலில் ஒவ்வொன்றாக மஞ்சள் கிழங்கை வைத்து அழகிய மாலை போல கட்டிக் கொள்ளுங்கள்.
கட்டிய அந்த மாலையை அருகில் இருக்கும் அம்பாள் கோவிலுக்கு சென்று அம்பாளுக்கு சாற்றி, மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நோய் தீரவும், இனி எந்த நோய் நொடிகளும் வராமல் இருக்கவும், குடும்பத்தில் ஆரோக்கியம் நீடித்து இருக்கவும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இது,போல மஞ்சளை வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபட்டு மாலையாக கோர்த்து அம்பாளுக்கு சாற்றி வர, சகல விதமான நோய்களும் நம்மை விட்டு நீங்கும் என்பது நம்பிக்கை.
மேலும் 108 விரலி மஞ்சள் வாங்கி அதை இதேபோல மஞ்சள் நூலில் மாலை போல அழகாக அடுக்கி வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். பின் அந்த மாலையை உங்கள் கைகளால் அம்பாளுக்கு சாற்றி வெள்ளிக்கிழமையில் அம்பாளை தரிசனம் செய்து கோவிலில் விளக்கி ஏற்றி வைத்து வழிபட்டு வந்தால் நீண்ட கால நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மஞ்சள் மாலைக்கு நோய்களை தீர்க்கும் சக்தி உண்டு. இந்த மாலையை அம்பாளுக்கு சாற்றி நோய்கள் தீர வேண்டும், சீக்கிரம் குணமாக வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு சாற்றி வழிபட்டால், நீங்கள் வேண்டிய வேண்டுதல், தடையில்லாமல் நிறைவேறும்.
இதையும் படிக்கலாமே:
வளர்பிறை அஷ்டமியில் பணத்தை ஈர்க்கும் சூட்சம வழிபாடு
வீட்டில் யாருக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் இருந்தாலும், குடும்பத்தில் இருக்கும் மூத்த பெண்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். மஞ்சள் கிழங்குகளை வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை பாக்குடன் வைத்து கொடுத்து வழி அனுப்ப வேண்டும் என்பது ஐதீகம். இந்த மஞ்சள் எப்போதும் வீட்டில் இருக்க வேண்டும். பலருக்கும் மஞ்சளை வைத்து என்ன செய்வது? என்று கூட தெரியாது, வீணாக்கி விடுகிறார்கள். விரலி மஞ்சள், குண்டு மஞ்சள் எதுவாக இருந்தாலும் வெள்ளிக்கிழமையில் கோவிலில் தானம் செய்ய, ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் குறையும்.