
பங்குனி மாதம் அமாவாசை முடிந்த அடுத்த நாள், வசந்த நவராத்திரி திதி துவங்கும். வட மாநிலங்களில் இந்த நவராத்திரி பிரசித்தியாக கொண்டாடப்படும். மொத்தமாக நமக்கு நான்கு நவராத்திரிகள் இருக்கிறது. தை மாதம் கொண்டாடப்படுவது சியாமலான நவராத்திரி. ஆடி மாதம் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி, புரட்டாசி மாதம் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி, நம்முடைய தமிழ் நாட்டில் இந்த புரட்டாசி மாதம் கொண்டாடப்படும் நவராத்திரியே பிரசித்தி பெற்ற நவராத்திரி ஆகும்.
பங்குனி மாத அமாவாசை முடிந்து, ராமநவமி அன்று வரை இடைப்பட்ட 9 நாட்களும் வசந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. உங்களுடைய வாழ்க்கையில் வசந்தம் வீச வேண்டும் என்றால், இந்த 9 நாளும் அம்பிகையை வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். மிக மிக எளிமையான முறையில் இந்த 9 நாளும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி அம்பிகையின் இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் போதும்.
வசந்த நவராத்திரியில் அம்பிகையை முழுமையாக விரதமர்ந்து வழிபட்ட பலனை நீங்கள் பெறுவீர்கள். ரொம்பவும் சோர்ந்து போன உங்கள் வாழ்க்கையில், கஷ்டம் நிறைந்த உங்கள் வாழ்க்கையில், வசந்தம் வீச துவங்கிவிடும். இன்று முதல் இந்த வசந்த நவராத்திரி முடியும் வரை நான் சொல்ல வேண்டிய அந்த மந்திரம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
இந்த நவராத்திரியில் அம்பிகையின் அருளை நாம் முழுமையாக பெற வேண்டும் என்றால், தினமும் மாலை நேரத்தில் வீட்டில் இருக்கும் அம்பாள் திருவுருவப்படத்திற்கு முன்பு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். உங்களுடைய வீட்டு பக்கத்தில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்த ஏதேனும் கோவில் இருந்தால், அந்த கோவிலுக்கு சென்று அந்த அம்பாளை வழிபாடு செய்வது, மிகச் சிறப்பான பலனை தரும்.
அது மட்டுமல்லாமல் தினமும் மாலை நேரத்தில் உங்கள் வீட்டில் லலிதா சகஸ்ரநாமம், லலிதா அஷ்டோத்திரம், மகாலட்சுமி அஷ்டோத்திரம், இதுபோல பாடல்களை ஒலிக்க விடுவதும் வீட்டில் மகாலட்சுமி அம்சத்தை கொண்டு வந்து சேர்க்கும். உங்கள் வீட்டில் இருக்கும் அம்பிகையின் திரு உருவப்படத்திற்கு, ஏதாவது ஒரு அம்மன் திரு உருவப்படத்திற்கு உதறி புஷ்பங்களால் 108 முறை அர்ச்சனை செய்து “ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ” இன்று மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.
இது ஒரு சமஸ்கிருத மந்திர வார்த்தை. அன்னை ரூபத்தில் இருக்கும் அம்பிகைக்கு வணக்கம் என்பது இதன் பொருள். என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி அம்பாளை வணங்கினால் இந்த வசந்த நவராத்திரியில் உங்கள் வாழ்வில் வசந்தம் வீசத் துவங்கிவிடும். ஒன்பது நாட்களும் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரியுங்கள்.
அவ்வளவு நேரம் உங்களால் மந்திரம் உச்சரிக்க ஒதுக்க முடியாது என்றாலும், பரவாயில்லை. 27 முறை இந்த மந்திரத்தை தினம் தினம் உச்சரியங்கள். 9 நாட்களில் உங்கள் வாழ்வில் தீராத துன்பம் தீர வேண்டுதல் வைத்து, இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் போது, இந்த ஒன்பது நாள் முடிவதற்குள் உங்களுடைய துன்பங்கள் உங்களை விட்டு விலக நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
இதையும் படிக்கலாமே: வேலை தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீர
அம்பாளின் அருள் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க இந்த மந்திரம் உங்களுக்கு ஒரு நல்ல வழியை காட்டும் என்ற நம்பிக்கையில் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.