- Advertisement -
- Advertisement -

நாம் இருக்கக்கூடிய வீட்டிற்கு என்று சில அமைப்புகள் இருக்கும். அந்த அமைப்புகளை நாம் சரியாக வைத்தோம் என்றால் நமக்கு எந்தவித தோஷமும் ஏற்படாது. ஒருவேளை எந்த மூலையில் எந்த அறையை கட்ட வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் இல்லாமல் நம் இஷ்டத்திற்கு கட்டினோம் என்றால் வாஸ்து தோஷம் ஏற்பட்டுவிடும். வாஸ்து பகவான் என்பவர் சிவபெருமானின் தீவிர பக்தராக திகழக்கூடியவர். இவர் வருடத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே கண் விழித்து இருப்பார்.

அப்படி அவர் கண்விழிக்கக்கூடிய நேரத்தில் நாம் அவரை வழிபாடு செய்து பூமி இடம் தொடர்பான வேலைகளை தொடங்கினோம் என்றால் அந்த வேலைகளில் எந்த வித தோஷமும் ஏற்படாமல் நல்ல விதத்தில் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வாஸ்து நாளில் வீட்டில் இருக்கக்கூடிய வாஸ்து தோஷத்தை நீக்குவதற்கும் நீண்ட நாட்களாக வாடகை வீட்டில் இருக்கிறோம். சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுடைய கனவு நினைவாவதற்கும் எந்த முறையில் தீபமேற்றி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

ஆடி மாதத்தின் பதினோராம் தேதி ஜூலை மாதத்தின் 27ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை வாஸ்து நாள் வருகிறது. அன்றைய நாளில் காலை 7:44 முதல் 8 20 வரை வாஸ்து நேரம் இருக்கிறது. இந்த நேரத்தில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். நம்முடைய வீட்டு பூஜை அறையில் சிவபெருமானின் படம் இருக்கும் அல்லவா? அதற்கு முன்பாக பச்சரிசி மாவினால் ஏதாவது ஒரு கோலத்தை போட்டுக் கொள்ளுங்கள். அந்த கோலத்தின் நான்கு புறங்களிலும் நான்கு திசைகளை வெளிப்புறத்தில் பார்த்தவாறு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். ஒவ்வொரு தீபமும் ஒவ்வொரு திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு சிவபெருமானுக்கு முன்பாக தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்துக்கொள்ள வேண்டும். கையில் வாசனை மிகுந்த மலர்களை வைத்துக்கொண்டு “ஓம் சிவாய நம ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சிவபெருமானின் அருளாலும் வாஸ்து பகவானின் அருளாலும் நம் வீட்டில் இருக்கக்கூடிய வாஸ்து தோஷம் நீங்கும்.

- Advertisement -

சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய வேண்டுதலை முன்வைத்து இந்த வழிபாட்டை செய்யும் பொழுது விரைவிலேயே சொந்த வீடு கட்டுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். பூஜை அறையில் இப்படி தீபம் ஏற்றுவதற்கு இட வசதி இல்லை என்பவர்கள் தங்களுடைய வீட்டின் மையப் பகுதியில் ஒரு நாற்காலியை போட்டு அதில் கோலத்தை போட்டு இதே முறையில் தீபமேற்றி வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த தீபம் வாஸ்து நேரம் இருக்கும் வரை எரிய வேண்டும். பிறகு அதை குளிர வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்கும் மூன்றாம் பிறை ரகசியம்

வாஸ்து தோஷத்தை நீக்குவதற்கும், வாஸ்து பகவானின் அருளை பெறுவதற்கும், சொந்த வீடு கட்டுவதற்கும் எளிமையான முறையில் தீபத்தை ஏற்றி வைத்து சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்யலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -