- Advertisement -

வாஸ்து ரீதியான பிரச்சினைகள் தீர ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

மனிதனின் அடிப்படை தேவையாக கருதப்படுவது உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம். இந்த மூன்றில் இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் கஷ்டப்படுவது இருக்க இருப்பிடத்திற்கு தான். இந்த இருப்பிடமானது மிகவும் சிறப்புக்குரியதாக இருக்க வேண்டும். ஏனென்றால் நமக்கு தூக்கம் என்பது எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு நாம் தூங்கக்கூடிய இடமும் முக்கியமாகவே கருதப்படுகிறது.

ஒரு சிலருக்கு பழைய வீட்டில் இருக்கும் பொழுது நன்றாக இருந்தது, புதிதாக வேறு ஒரு வீட்டுக்கு மாறியதும் பல தடைகளும் தடங்கல்களும் ஏற்படுவதை உணர்வார்கள் இதற்கு வாஸ்து ரீதியான தோஷங்களே காரணமாக திகழ்கிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் வாஸ்து ரீதியான தோஷங்கள் நீங்கவும் வெற்றிகள் பெறவும் செவ்வாய்க்கிழமை அன்று தீபம் ஏற்றும் முறையை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

வாஸ்து ரீதியான பிரச்சினைகள் தீர

தீப வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரிய வழிப்பாடாக திகழ்கிறது. தீபத்தில் நாம் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் ஆவாகனம் செய்யலாம். அதே போல் நாம் ஏற்றக்கூடிய தீபத்திற்கும் பலன்கள் இருக்கிறது. எந்த எண்ணெய்க்கு என்ன பலன் என்றும் எந்த திரியை பயன்படுத்தி ஏற்றினால் அதற்கு என்ன பலன் என்றும் பல விஷயங்கள் தீபத்தை வைத்து நம்மால் செய்து கொள்ள முடியும். அந்த வகையில் நாம் வசிக்கும் வீட்டில் இருக்கக்கூடிய வாஸ்து ரீதியான பிரச்சினைகள் தீர ஏற்ற வேண்டிய தீபத்தை தெரிந்து கொள்வோம்.

பொதுவாக வீடு, நிலம், வாசல் போன்ற அனைத்திற்கும் செவ்வாய் பகவானே உரியவராக திகழ்கிறார். செவ்வாய் பகவானிற்குரிய கிழமையாக செவ்வாய்க்கிழமை திகழ்கிறது. அதனால் இந்த தீபத்தை செவ்வாய்க்கிழமை அன்று ஏற்ற வேண்டும். நாம் வசிக்கும் வீட்டில் மண் இருக்கும் அல்லவா? அந்த மண்ணை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை எடுத்துக் கொண்டு போய் உங்கள் வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். பிறகு அந்த மண்ணை வட்ட வடிவில் பரப்பிவிட்டு அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இவ்வாறு தீபம் ஏற்றிய பிறகு வாஸ்து ரீதியான பிரச்சினைகள் தீர்வதற்கு என்று ஒரு மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரத்தை மனதார கூறவேண்டும்.

ஓம் தத்புருஷாய வித்மஹே பூமி புத்ராய தீமஹி தன்னோ வாஸ்து பிரசோதயாத்

இந்த மந்திரத்தை முழுமனதோடு 108 முறை செவ்வாய்க்கிழமை ஏற்றி வைத்திருக்கும் தீபத்தை பார்த்து மனமுருக வேண்டி வழிபடுவதன் மூலம் சொந்த வீடு கனவு நினைவாகும். வீட்டில் இருக்கக்கூடிய வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்கி தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும்.

இதையும் படிக்கலாமே: செவ்வாய்க்கிழமை வளர்பிறை சதுர்த்தி வழிபாடு

இந்த எளிமையான தீப வழிபாட்டை செவ்வாய்க்கிழமை தோறும் மேற்கொண்டு மந்திரத்தை முழுமனதோடு உச்சரிப்பவர்களுக்கு வாஸ்து ரீதியான பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -