- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

உங்கள் வீட்டில் தண்ணீரை இந்த இடத்தில் மட்டும் வைக்காதீர்கள். விபரீத விளைவுகள் நேரிடும்.

பஞ்ச பூதங்களில் ஒன்று நீர். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். நாம் வாழ்வதற்கு மூலாதாரமாக இருக்கும் பொருட்களில் இந்த தண்ணீரும் அடங்கும். வீட்டை கட்டும்போது தண்ணீரை சேகரித்து வைக்கும் தொட்டியை நாம் அனைவரும் வாஸ்து பார்த்து தான் கட்டுவோம். அது மொட்டை மாடியில் வைக்கும் தண்ணீர் தொட்டியாக இருந்தாலும் சரி, பூமிக்கு அடியில் தண்ணீரை சேகரித்து வைக்கும் தண்ணீர் தொட்டியாக இருந்தாலும் சரி. வீட்டின் கழிவு நீரை சேகரிக்கும் பாதாளசாக்கடை கூட வாஸ்து சாஸ்திரத்தின் படி தான் வைக்கப்படுகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் நம் சமையலறையில் சமையலுக்கும், குடிப்பதற்கும் வைக்கும் குடிநீர் குடத்தை வாஸ்து சாஸ்திரப்படி பார்த்து வைக்கின்றோமா என்றால், இல்லை. குடிநீரை நாம் நினைத்த இடத்தில் எல்லாம் வைத்துக்கொள்வோம். ஆனால் அப்படி வைப்பது தவறு. எந்த திசையில் தண்ணீரை வைக்கலாம். எந்த திசையில் தண்ணீரை வைக்கக்கூடாது. என்பதை பற்றிய சந்தேகங்களுக்கு தீர்வு தான் இந்த பதிவு.

முதலில் குடிதண்ணீரை நம் வீட்டில் சமையல் அறையில் உள்ளே மட்டும்தான் வைக்க வேண்டும். அது பானையாக இருந்தாலும் சரி. குடங்களாக இருந்தாலும் சரி. வீட்டின் மற்ற இடங்களில் வைப்பதை தவிர்ப்பது நல்லது. சமையலறையின் கிழக்கு திசையில் தண்ணீரை வைத்தால் அமைதியான குடும்பச் சூழ்நிலை ஏற்படும். சண்டை சச்சரவுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். சில வீடுகளில் கிழக்கு பக்கத்தில் இருந்து வரும் சூரிய ஒளியானது சமையலறையில் விழும்படி இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் நம் குடிதண்ணீரின் மீதும் சூரிய ஒளி படுவது என்பது நமக்கு நல்ல ஆற்றலை கொடுக்கும்.

- Advertisement -

அடுத்ததாக முக்கியமாக சமையலறையில் மேற்கு, தெற்கு திசைகளில் கட்டாயம் தயவுசெய்து தண்ணீரை வைக்காதீர்கள். இப்படி செய்தால் அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் தான் பாதிக்கப்படுவார்கள். எவ்வளவுதான் வருமானம் இருந்தாலும், எப்படிப்பட்ட செல்வச்செழிப்பு இருந்தாலும், ஏதோ ஒன்றை இழந்தது போன்ற மனநிலை பெண்களுக்கு ஏற்படும். மன நிம்மதி என்பது இருக்காது. சில சமயங்களில் எதிர்பாராத விபத்தின் மூலம் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும். இதனால் மேற்கு திசையும், தெற்கு திசையில் தண்ணீர் வைப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

வடக்கு திசையில் தண்ணீரை வைக்கலாம். இதன் மூலம் நல்ல பலனை அடைய முடியும் ஒருவருக்கு தொழில்வளர்ச்சி, வாழ்க்கையில் முன்னேற்றம், தன்னம்பிக்கை இவைகளை நல்ல முறையில் கொடுக்கும்.

- Advertisement -

அடுத்ததாக சமையலறையின் தென்மேற்கு மூலையில் தண்ணீரை வைக்கக்கூடாது. இதன் மூலம் நம் வீட்டில் பல பிரச்சினைகள் உண்டாவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வீட்டில் உள்ளவர்களின் மனதில் இனம்புரியாத பயம், பண நெருக்கடி, கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சனை, நம்மை சுற்றி உள்ள உறவுகளிடம் விரோதம், தொழிலில் பிரச்சனை, போன்ற அனைத்து பிரச்சனையும் வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தென்கிழக்கு மூலையில் கட்டாயம் தண்ணீரை வைக்கக்கூடாது இது அக்கினி மூலை. அக்கினி, நீர் எதிர் விளைவுகளை காட்டிவிடும். வடமேற்கு மூலையிலும் தண்ணீர் வைக்கக்கூடாது.

- Advertisement -

சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் தண்ணீரை வைப்பது நன்மை தரும். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். ஆரோக்கியமும், மனநிறைவும் நிறைந்திருக்கும்.

குடிக்கும் தண்ணீர் பானையை வைப்பதில் கூடவா சாஸ்திரம் என்று சிலர் சிந்திக்கலாம். ஒன்றை மட்டும் நாம் மனதில் கொள்ள வேண்டும். நமக்கு நல்ல நேரம் இருக்கும்போது நாம் செய்யும் தவறுகள் நம்மை பெரிதாக பாதிக்காது. அதுவே கெட்ட நேரமாக இருந்தால் நாம் செய்யும் சிறு சிறு தவறும் நமக்கு பெரிய பாதிப்பை கொடுக்கும். நமக்கு நன்மை தரக்கூடிய விஷயமாக இருந்தால் அதை பின்பற்றுவதில் எந்த தவறும் இல்லை.

இதையும் படிக்கலாமே
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vastu for water in Tamil. Vastu for drinking water in Tamil. Drinking water direction as per vastu. Drinking water vastu in Tamil.

- Advertisement -