
புதிய மனை அல்லது வீடு வாங்குபவர்கள் இப்பொழுதெல்லாம் வாஸ்து பார்க்கவும் துவங்கி விட்டனர். வாஸ்து பார்க்க பணம் செலவாகும் என்று எண்ணாமல் காலம் முழுக்க வாழும் இல்லம் சரியான முறைப்படி அமைந்துள்ளதா? என்பதை அறிந்து கொள்வது நம் அடுத்தடுத்த தலைமுறையினரையும் அவ்வீட்டில் பாதுகாப்பாக தங்க செய்யும். இப்படிப்பட்ட வாஸ்து சாஸ்திரம் பணம் வீண் விரயமாகாமல் இருக்க சில வழிமுறைகளை தந்தருள்கிறது. அவற்றைப் பற்றிய ஒரு சிறு தொகுப்பினை இந்த வாஸ்து சார்ந்த பதிவின் மூலம் தொடர்ந்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
வாஸ்துவில் ஏராளமான நுண் விஷயங்கள் உள்ளன. அவற்றை நாம் முறையாக கடைப்பிடித்து வீட்டை கட்டி இருந்தால் எந்தவிதமான வாஸ்து தோஷங்களும் இன்றி நிம்மதியுடனும், செல்வ செழிப்புடனும் தொடர்ந்து நம் வாழ்க்கை பயணத்தை தொடர்வோம். சிறு சிறு தோஷங்கள் இருப்பின் அதற்கான வழிமுறையும் வாஸ்துவில் உள்ளது.
புதிய வீட்டை கட்டி அதில் குடி புகுவது என்பது அல்லது புதிய மனை வாங்குவது என்பது அவ்வளவு எளிமையாக விஷயம் அல்ல! மனை வாங்கியவுடன் சிலருக்கு நல்ல ஒரு அதிர்ஷ்டமான சூழ்நிலையை சந்திக்க கூடிய வாய்ப்புகளை பெறுவார்கள். வாஸ்து ஆலோசனை இல்லாமல் புதிய வீட்டை கட்டியவர்கள் கட்டிய பின்பு அவதிப்படுவதையும் நாம் பார்த்திருப்போம்.
வாஸ்துவின் படி ஒவ்வொரு திசை சுவரும் ஒவ்வொரு விதமான பலன்களை கொடுக்கக்கூடியது. பணம் வீண் விரயமாகாமல் இருக்க வீட்டின் வடக்கு சுவற்றில் ஒரு ஜன்னல் இருப்பது நல்லது. பணம் ஒருவர் கையில் நிலையாக தங்குவது கிடையாது. இன்று நம் கையில் இருக்கும், நாளை அது வேறு ஒருவருடைய கையில் இருக்கும்.
இப்படி மாறிக்கொண்டே இருக்கும் பணத்தை எப்பொழுதும் பூஜை அறையில் வைக்கவே கூடாது. பூஜை அறை தெய்வாம்சம் பொருந்திய இடம் என்பதால் அவ்விடத்தில் பலருடைய கைபடும் பணத்தை பத்திரப்படுத்தக் கூடாது என்பது விதியாகும். பணத்தை இரும்பு பெட்டிகளில் பூட்டி வைக்க கூடாது. மரப்பெட்டியில் தான் வைக்க வேண்டும். இது பணத்தை மென்மேலும் சேர்த்துக் கொண்டே செல்லும்.
வடக்கு சுவற்றில் ஜன்னல் இருக்கும் படியான அமைப்பு உள்ள வீடுகளில் அவ்வளவு எளிதாக பணம் வீணாக விரயமாவதில்லை. எப்பொழுதும் வீட்டை காற்றோட்டமாகவும் வெளிச்சம் உள்ளே வரும்படியும் வைத்திருக்க வேண்டும். கதவு மூடப்பட்டு இருந்தாலும் வீட்டின் ஜன்னல்கள் அத்தனையும் திறந்தபடி வைத்திருப்பது நல்லது. வெளிச்சமும் காற்றும் தான் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கிய அம்சம்.
பணத்தை ஒருவருக்கு கொடுக்கும் பொழுது திறந்த நிலையில் வைத்து கொடுக்கக் கூடாது. மடித்து தான் கொடுக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு பணத்தை செலவழிக்கிறோமோ அந்த அளவிற்கு பணம் ஆனது சேரும் என்பது வாஸ்துவில் இருக்கும் மிக முக்கியமான நம்பிக்கை. நல்ல காரியங்களுக்கும், புண்ணிய காரியங்களுக்கும் பணம் செலவு செய்ய தயங்காதீர்கள். உங்களை நீங்கள் செல்வந்தராக நினைத்து தாராளமாக பணத்தை செலவு செய்யுங்கள்.
இதையும் படிக்கலாமே:
முறையாக சம்பாதிக்காதவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்!
வலது கை கொடுப்பது இடது கைக்கு கூட தெரியக்கூடாது என்பார்கள். நீங்கள் செலவு செய்வது மற்றவர்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். பணத்தை செலவு செய்வது போல தண்ணீரை அதிக அளவு சிக்கனப்படுத்த வேண்டும். வீட்டின் ஜன்னல்களை எப்போதும் மூடியே வைத்திருக்காமல் சூரிய வெளிச்சமும், நல்ல காற்றும் உள்ளே வரும்படியான அமைப்பை ஏற்படுத்தி வையுங்கள். கண்டிப்பாக பணம் வீண் விரயம் ஆவதை தவிர்க்கலாம்.