
நம் உடலின் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சத்துக்கள் நிறைந்த காய்கறிகளையும் கீரை வகைகளையும் நாம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம்முடைய உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். அதே வகையில் ஆரோக்கியமான சத்து மிகுந்த காய்கறிகளை நம்முடைய சருமத்திற்கு நாம் பயன்படுத்தும் பொழுதும் அனைத்து ஊட்டசத்துகளும் சருமத்திற்கு கிடைத்து சருமமும் ஆரோக்கியமாக திகழும். அந்த வகையில் இன்றைய அழகு குறிப்பில் பொலிவான சருமத்தை பெறுவதற்கு உதவக்கூடிய காய்கறி ஃபேஸ் பேக்கை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
நம்முடைய சருமம் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமென்றால் சில காய்கறிகளை நாம் ஜூஸாக தயார் செய்து தினமும் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி இருப்பார்கள். அதில் மிகவும் முக்கியமான ஒரு ஜூஸாக திகழ்வதுதான் ஏபிசி ஜூஸ். ஆப்பிள், கேரட், பீட்ரூட் என்று இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு ஜூஸ் ஆக குடிப்பதன் மூலம் உடலுக்கு பல ஆரோக்கியம் கிடைக்கும் என்றும் அதனால் நம்முடைய சருமமும் பொலிவுடன் திகழும் என்றும் மருத்துவர்கள் கூறியிருப்பார்கள்.
இப்படி இந்த பொருட்களை நாம் சாப்பிடுவதோடு முகத்திற்கு பேஸ் பேக்காகவும் பயன்படுத்தினோம் என்றால் அதன் பலன் இன்னும் அதிகமாக தெரியும். அந்த ஃபேஸ் பேக்கில் பற்றி பார்ப்போமா? இதற்கு நமக்கு தேவைப்படுவது பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு.
கேரட்டை நம்முடைய முகத்தில் நாம் பயன்படுத்துவதன் மூலம் இதில் இருக்கக்கூடிய விட்டமின் சி சத்தால் நம்முடைய சருமம் பொலிவுடன் திகழும். மேலும் சருமத்தில் இருக்கக்கூடிய மாசு மருக்கள் அனைத்தும் நீங்கும். இதில் விட்டமின் ஏ இருப்பதால் அதிகப்படியாக சுரக்கக்கூடிய எண்ணையை நீக்குவதோடு மட்டுமல்லாமல் சருமத்தை என்றும் இளமையாக பார்த்துக் கொள்ள உதவுகிறது. அதோடு மட்டுமல்லாமல் சூரிய ஒளி கதிர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளையும் நீக்குகிறது. முகத்தில் இருக்கக்கூடிய கருமையை நீக்குவதற்கும் கேரட் உதவுகிறது.
அடுத்ததாக பீட்ரூட்டை நம்முடைய சருமத்தில் உபயோகப்படுத்துவதன் மூலம் சருமத்தில் இருக்கக்கூடிய கொலாஜினை அதிக அளவில் உற்பத்தி செய்து இளமையான தோற்றத்தை தருகிறது. அதோடு மட்டுமல்லாமல் முகத்தின் நிறத்தை அதிகரிக்கவும் பீட்ரூட் உதவுகிறது. மேலும் வயதாகும் தோற்றத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல் இயற்கையிலேயே பொலிவான சருமத்தை பெறவும் பீட்ரூட் உதவுகிறது.
உருளைக்கிழங்கு நம்முடைய முகத்தில் நாம் பயன்படுத்துவதன் மூலம் கருமை அனைத்தும் நீங்கும். பிரகாசமான பொலிவான முகத்தை பெற முடியும். அதோடு கண்களை சுற்றி இருக்கக்கூடிய கருவளையம் நீங்கும். இந்த மூன்று பொருட்களையும் ஒரே சரிசமமான அளவு எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும். இதில் தண்ணீர் எதுவும் சேர்க்கக் கூடாது.
இதை அப்படியே நம்முடைய முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும். இப்படி நாம் தினமும் செய்து வர நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் வயதாகும் தோற்றத்தை குறைத்து இளமையான பொலிவான அழகான ஆரோக்கியமான சருமத்தை பெற முடியும்.
இதையும் படிக்கலாமே: முகச்சுருக்கம் நீங்க ஃபேஸ் கிரீம்
சமைப்பதற்காக உபயோகப்படுத்தும் இந்த காய்கறிகளை நம்முடைய முகத்திற்கும் நாம் பயன்படுத்தி ஆரோக்கியமான அழகான சருமத்தை பெற்றுக்கொள்வோம்.