30, 35 வயதுக்கு மேல் செல்பவர்கள் அனைவருக்கும் முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதாகும் தோற்றத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட நிலையில் முகத்திற்கும் நம்முடைய சருமத்திற்கும் நாம் சிறிது முக்கியத்துவம் கொடுத்தோம் என்றால் நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் அனைத்தும் நீங்கி இளமையான தோற்றத்தை நம்மால் பெற முடியும். அப்படிப்பட்ட இளமையான தோற்றத்தை பெறுவதற்கு உதவக்கூடிய ஒரு ஃபேஸ் க்ரீமை எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
முக சுருக்கம் நீங்க
வயது முதிர்ச்சி காரணமாக முகத்தில் இருக்கக்கூடிய கொலாஜின் உற்பத்தி என்பது குறைய ஆரம்பிக்கும், இதனால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட ஆரம்பித்து விடும். அப்படிப்பட்ட சுருக்கங்களை நீக்குவதற்கும் சருமத்தில் கொலாஜின் உற்பத்தியை சரிசமமாக பார்த்துக் கொள்வதற்கும் வீட்டிலேயே ஒரு ஃபேஸ் கிரீமை தயார் செய்யலாம்.
இந்த கிரீமை தயார் செய்வதற்கு நமக்கு சாப்பாடு வடித்த கஞ்சி வேண்டும். இதில் உப்பு சேர்த்து இருக்கக் கூடாது. சாப்பாடு வடித்ததும் அந்த கஞ்சியை சிறிது நேரம் ஆற வைத்தோம் என்றால் அது கெட்டியான பதத்திற்கு வந்து விடும். அந்த தண்ணீரை இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் பழுத்த நாட்டு தக்காளியாக பார்த்து அதன் சாறை எடுத்து ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை சேர்க்க வேண்டும். கடைசியாக ஒரு ஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இது ஒரு கிரீம் பதத்திற்கு வரும். இந்த கிரீமை ஒரு ஏர்டைட் கண்டெய்னரில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் இரவு படுக்க செல்வதற்கு முன்பு இந்த கிரீமை எடுத்து நம்முடைய முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி நன்றாக கீழ் இருந்து மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் நீங்கும். இதில் இருக்கக்கூடிய அனைத்து பொருட்களும் நம்முடைய சருமத்திற்கு அதிக அளவு நற்பலன்களை தரக்கூடிய பொருட்களாக திகழ்கிறது.
இந்த கிரீமை நாம் பயன்படுத்துவதன் மூலம் சுருக்கங்கள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் நம்முடைய சருமத்திற்கு இளமையான தோற்றத்தை தரும். முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளையும், இறந்த செல்களையும் நீக்குவதற்கு இது பெரிதும் துணை புரிகிறது.
இதையும் படிக்கலாமே: முடி அடர்த்தியாக வளர ஹேர் பேக்
கெமிக்கல் நிறைந்த கண்ட கிரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டிலேயே இப்படி இயற்கையான பொருட்களை பயன்படுத்தி கிரீம் தயார் செய்து உபயோகப்படுத்துவதன் மூலம் நம்முடைய சருமத்திற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்பட்டாமல் என்றென்றும் இளமையாக நம்மால் இருக்க முடியும்.