
செய்யும் வேலையில் திறமை வெளிப்பட வேண்டும். கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்றாலும் முருகர் வழிபாடு சிறந்தது. எனக்கு வேலையே இல்லை. நல்ல வேலை சீக்கிரம் கிடைக்க வேண்டும் என்று சொன்னாலும் முருகன் வழிபாடு தான் சிறந்தது. வியாபாரம் சிறக்க வேண்டும். வியாபாரத்தில் இருக்கும் நஷ்டம் சரியாக வேண்டும் என்றாலும் முருகப்பெருமானின் பாதங்களை தான் பிடிக்க வேண்டும்.
அதிலும், வியாபாரம் தொழில் வேலை எல்லாவற்றிற்கும் அதிபதியாக இருக்கக்கூடிய கிரகம் சூரிய பகவான். அந்த சூரிய பகவானுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் வளர்பிறை சஷ்டி திதியில் முருகனை இந்த முறையில் வழிபாடு செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய வேண்டுதல் பலிக்கும். சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும்.
சஷ்டி திதி என்றாலே மாலை நேர வழிபாடு தான் சிறப்பு. 28-9-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டின் அருகில் முருகன் கோவிலுக்கு செல்லுங்கள். இரண்டு நெய்தீபம் ஏற்றுங்கள். முருகனது வேல் மனதார வணங்கிக் கொள்ளுங்கள். வேலவனை வழங்கினால் வேலை கிடைக்கும்.
இது எந்த அளவுக்கு உண்மை என்பது வழிபாட்டை நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு நிச்சயம் தெரியும். பிறகு முருகனுக்கு செவ்வரளி பூக்களை வாங்கிக் கொடுத்து, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து, அந்த முருகன் கோவிலிலேயே அமர்ந்து இந்த மந்திரத்தை 27 முறை படிக்கலாம்.
ராஜராஜஸகோத் பூதம்
ராஜீவாயத லோசனம்
ரதீசகோடி ஸெளந்தர்யம்
தேஹிமே விபுலாம் ச்ரியம்
எங்களால கோயிலுக்கு போக முடியல. வீட்டிலேயே அந்த முருகப்பெருமானுக்கு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இரண்டு வாழைப்பழங்கள் நெய்வேத்தியம் வைத்து, இந்த மந்திரத்தை 27 முறை படிக்கலாம். முடிந்தால் இந்த மந்திரத்தை ஒரு பேப்பர் பேனாவை எடுத்து 27 முறை எழுதுங்கள்.
இதையும் படிக்கலாமே: ஞாயிற்றுக்கிழமை சஷ்டி வழிபாடு
இன்னும் சிறப்பான பலன் விரைவாக கிடைக்கும். என் வாழ்க்கையே என்னோட வேலை தான் அப்படி என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு சமர்ப்பணம். நம்பிக்கை இருந்தால் நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள். அடுத்த சஷ்டி திதி வருவதற்குள் நீங்க ஒரு நல்ல வேலையில் உட்கார்ந்து இருப்பீங்க.