- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஞாயிற்றுக்கிழமை சஷ்டி வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை சஷ்டி வழிபாடு

- Advertisement -

முருகன் அருளால் முடியாதது ஒன்றுமே இல்லை. இன்று ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் வளர்பிறை சஷ்டி திதி. முருகனுக்கு உகந்த நாள். உங்களுடைய வாழ்க்கையில் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், நல்ல வேலை கிடைக்காமல் இருந்தால், வியாபாரத்தில் வருமானம் வராமல் இருந்தால், நோய்நொடி பிரச்சனை இருந்தால், இன்றைய தினம் முருகர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

நிச்சயமாக எல்லா பிரச்சனைகளுக்கும் நல்லதொரு தீர்வு கிடைக்கும். அது மட்டுமல்லாமல் முருகனது ஆறு கரங்களாலும், ஆசிர்வாதம் உங்களை வந்து சேரும். வளர்பிறை சஷ்டி முருகர் வழிபாட்டை பற்றிய சில ஆன்மீகம் சார்ந்த தகவலை இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

ஞாயிறு வளர்பிறை சஷ்டி

இன்று 28-9-2025 மாலை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்லுங்கள். அங்கு முருகனுக்கு விசேஷ பூஜைகள் நடக்கும். அதில் கலந்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்தால் அந்த முருகனுக்கு உங்கள் கையால் பழங்களால் செய்யப்பட்ட பஞ்சாமிர்தத்தை தயார் செய்து கொடுக்கலாம். ரொம்ப ரொம்ப நல்லது. நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

பிறகு அந்த முருகன் கோவிலில் கட்டாயமாக வேல் இருக்கும். சன்னிதானத்திற்கு வெளியில் வேல் மயில் எல்லாம் வைத்திருப்பார்கள். அந்த வேலுக்கு முன்பாக அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய பிரச்சனைகளை எல்லாம் முருகன் பாதத்தில் இறக்கி வைத்து விடுங்கள். பின்பு இந்த மந்திரத்தை மட்டும் மனதார 27 முறை சொல்லுங்கள்.

- Advertisement -

முருகன் வேல் மந்திரம்

மேலும் மேலும் துணை !
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க !

இந்த மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு பின்பு “ஓம் சரவணபவ” மந்திரத்தை சொல்லி பத்து நிமிடங்கள் ஆழ்ந்த நிலையில் தியானத்தில் அமர்ந்து விடுங்கள். கோவிலில் உங்களை சுற்றி என்ன சத்தம் கேட்டாலும், உங்கள் காதுகள் அதற்கு செவிசாய்க்க கூடாது.

- Advertisement -

முருகப்பெருமானை மனதில் நினைத்து சரவணபவ மந்திரத்தை சொல்லி “முருகனே நீயே கதி” என்று எவர் ஒருவர் வேல்முன்பு இந்த மந்திரத்தை சொல்கிறீர்களோ, அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் விலகும். முருகப்பெருமானின் ஆறு கரங்களில் இருந்தும் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: சகல செல்வங்களைப் பெற உதவும் பெருமாள் மந்திரம்

ஞாயிறு சூரிய பகவான். இவர் தான் நம்முடைய வேலை வியாபாரத்தை எல்லாம் பார்க்கக்கூடிய கிரகம். அந்த சூரிய பகவானுக்கு சொந்தமான ஞாயிற்றுக்கிழமையில் வந்திருக்கும் சஷ்டி திதியில் முருகனைக் கும்பிட்டால் சூரிய பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்து, வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனை, தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனை விலகும் என்பதுதான் இந்த வழிபாட்டிற்கு பின்னால் மறைந்திருக்கும் நன்மை. உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் மேல் சொன்ன வழிபாட்டை செய்து பலன் பெறுங்கள்.

சற்று முன்