
பணக்கஷ்டத்தை உடனடியாக தீர்ப்பதற்கு என்று ஒரு சில பரிகாரங்கள் நமக்கு ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். உங்களுடைய வாழ்க்கையில் செல்வ வளத்தில், உடனடியாக உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால், உடனடியாக வறுமையில் இருந்து விடுபட வேண்டும் என்றால், வாங்கிய கடனை எல்லாம் அடைப்பதற்கு உடனடியாக ஒரு வழி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பவர்கள்.
ஏதோ ஒரு கெட்ட நேரம் சூழ்நிலை காரணமாக குடும்பத்தில் பிரச்சினை என்று, நிலைகுலைந்து போனவர்கள், குடும்ப சூழ்நிலை மாற வேண்டும் என்றால், என்ன செய்வது. இந்த பிரச்சனைக்கு எல்லாம் தீர்வு காண மகாலட்சுமியின் கடாட்சம் கிடைக்க வேண்டும், அதற்கு உடனடியாக வீட்டில் இருக்கும் கணவனும் மனைவியும் சேர்ந்து இந்த வழிபாட்டை செய்யுங்கள்.
இந்த வழிபாட்டை செய்வது சிரமம். இதற்கு எங்களுக்கு நேரமில்லை என்ற எந்த காரணத்தையும் சொல்லக்கூடாது. ஒரே ஒரு வெள்ளிக்கிழமை இந்த வழிபாட்டை செய்து விட்டால், உங்கள் வாழ்வில் சந்தோஷம் மலர்ந்து விடும். அது என்ன வழிபாடு ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
நெல்லி மரத்திற்கு பூஜை செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் நெல்லி மரம் இல்லை என்றால், நெல்லி மரம் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்திற்குச் சென்று பூஜை செய்ய வேண்டும். வீட்டில் நெல்லி மரம் இருந்தால் வீட்டிலேயே இந்த பூஜையை செய்து கொள்ளலாம். சின்ன நெல்லிக்காய் காய்க்க கூடிய மரம் அல்ல. பெரிய பெரிய நெல்லிக்காய் காய்க்கும் அல்லவா. அந்த மரத்திற்கு தான் பூஜை செய்ய வேண்டும். அந்த மரத்தில் மகாலட்சுமியும் விஷ்ணுவும் வாசம் செய்வதாக ஐதீகம்.
ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று நெல்லி மரத்திற்கு அடியில் கூட்டி சுத்தம் செய்துவிட்டு, நெல்லி மரத்தை சுற்றி மஞ்சள் தண்ணீரை தெளித்து விடவும். பிறகு நெல்லி மரத்திற்கு மஞ்சள் சந்தனம் தடவி, குங்கும பொட்டு வைத்து விடுங்கள். நெல்லி மரத்திற்கு கீழே அரிசிமாவால் சின்னதாக கோலம் போட வேண்டும். கோலமாவில், கோலம் போடக்கூடாது.
அரிசி மாவால் கோலம் போட்டுவிட்டு கொஞ்சம் உதிரி புஷ்பங்களை எடுத்து அந்த நெல்லி மரத்திற்கு மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். மகாலட்சுமி அஷ்டோத்திரம் படிக்க தெரியாதவர்கள் மகாலட்சுமி அஷ்டோத்திரத்தை ஒலிக்க விட்டு இந்த பூஜையை செய்ய வேண்டும். கணவனும் மனைவியும் சேர்ந்து இந்த பூஜையை செய்துவிட்டு அந்த மரத்திற்கு கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த வழிபாட்டில் பழம் பிரசாதம் என்ன வேண்டும் என்றாலும் நீங்கள் உங்கள் தகுதிக்கு ஏற்றபடி வைத்து பூஜையை மேற்கொள்ளலாம். இந்த பூஜையில் கட்டாயம் வைக்க வேண்டிய பொருள் 108 ஒரு ரூபாய் நாணயங்கள். ஒரு சின்ன கிண்ணத்தில் 108 ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு அந்த மரத்திற்கு அடியில் வைத்து விடுங்கள்.
மனம் உருகி இந்த வேண்டுதலை அந்த மரத்திடம் வைத்து, விஷ்ணு பகவானையும் மகாலட்சுமியும் மன உருகி வேண்டிக் கொண்டால், உங்களுக்கான அருள் ஆசி உடனடியாக கிடைக்கும். இறுதியாக கணவன் மனைவி இருவரும் தம்பதி சரீரமாக அந்த மரத்திற்கு நமஸ்காரம் செய்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக நினைத்து இந்த பூஜையை செய்யுங்கள்.
பூஜை நிறைவடைந்த உடன் பூஜையில் வைத்த பொருட்களை எல்லாம் கொண்டு வந்து நீங்கள் உங்கள் வீட்டில் பயன்படுத்திக் கொள்ளலாம். பூ பழம் பிரசாதம் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். அந்த கிண்ணத்தில் வைத்திருக்கும் ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிந்து, வீட்டில் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டம் தரும் வாராகி மந்திரம்
பிறகு பாருங்கள் ஒரு சில நாட்களிலேயே உங்களுடைய செல்வ வளம் வானளவு உயரம். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பதிவு நல்ல வழியை காட்டி தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.