- Advertisement -

செல்வம் பெருக்கும் வெள்ளிக்கிழமை பரிகாரம்

- Advertisement -

ஆன்மீகத்திற்கும், நாணயத்திற்கும் நெடுந்தூர தொடர்பு உண்டு. நாணயம் என்பது மகாலட்சுமியின் ஸ்வரூபம். மன்னாதி மன்னர்கள் காலம் முதல் இப்போது வரை நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த நாணயம் கொண்டு மகாலட்சுமி மற்றும் குபேரனுக்கு அர்ச்சனை செய்து வந்தால் குடும்பத்தில் வறுமை என்பதே இருக்காது. வெள்ளிக்கிழமையில் ஐந்து ரூபாய் வைத்து 27 வெள்ளிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்ய, செல்வம் மளமளவென உயரும் என்பது நம்பிக்கை. இந்த வெள்ளிக்கிழமை பரிகாரத்தை எப்படி செய்வது? என்று ஆன்மீகம் சார்ந்த சுவாரசியமான தகவல்களை தொடர்ந்து காண்போம் வாருங்கள்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் இந்த பரிகாரத்தை தவறாமல் செய்ய வேண்டும். தொடர்ந்து 27 வெள்ளிக்கிழமைகளில் பூஜை அறையில் இந்த பரிகாரத்தை செய்த பின்பு, நிறைவு செய்ய வேண்டும். முறையாக இப்பரிகாரத்தை செய்து முடிப்பவர்களுக்கு குறைவில்லாத செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறார். பாற்கடலில் இருந்து மகாலட்சுமி பிறந்ததால், கல் உப்பு அவளின் அம்சமாக போற்றப்படுகிறது. தூள் உப்பு பயன்படுத்துவதை விட, கல் உப்பு பயன்படுத்துபவர்கள் இல்லத்தில் பக்தியும், ஒழுக்கமும், சிந்தையும், செயலும் மேம்பட்டு இருக்கும்.

- Advertisement -

இந்த சுத்தமான கல் உப்பை ஒரு கண்ணாடி பவுல் அல்லது புதிய மண் குவளையில் நிறைத்து, அதை பூஜை அறையில் முதல் வெள்ளிக்கிழமையில் வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரை அல்லது குளிகை நேரத்தில் வைக்க சுப பலன்கள் கிடைக்கும். வழக்கமான பூஜைகளை செய்துவிட்டு ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை உப்பின் மீது வைக்க வேண்டும். ஒரு வாரம் அது அப்படியே இருக்க வேண்டும்.

அடுத்த வெள்ளி கிழமையில் இதே போல பூஜைகள் செய்யும் பொழுது இன்னொரு நாணயத்தை உப்பில் சேர்க்க வேண்டும். இப்படி ஒவ்வொரு வாரமும் ஆக 27 வாரங்கள், 27 நாணயங்களை உப்பில் போட்டுக் கொண்டே வர வேண்டும். கடைசி 27 வது வெள்ளிக்கிழமையில் பூஜைகளை முடித்த பின்பு உப்பில் போட்ட நாணயங்களை மட்டும் தனியாக எடுத்து ஒரு மஞ்சள் துணியில் மூட்டையாக கட்டி அருகில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு சென்று உண்டியலில் சமர்ப்பிக்க வேண்டும்.

- Advertisement -

குவளையில் இருக்கும் உப்பை கொண்டு போய் ஓடும் நீரில் விட்டு விட வேண்டும். நீர்நிலைகள் அருகில் இல்லாதவர்கள் வீட்டில் இருக்கும் சிங்கிள் போட்டு தண்ணீரை ஓட விடுங்கள். தொடர்ந்து 27 வாரங்கள் மகாலட்சுமியை பூஜித்து, குலதெய்வத்திற்கு நேர்ந்து கொண்டு, இந்த உப்பு பரிகாரத்தை செய்து உப்பை நீரிலும், நாணயங்களை குலதெய்வ உண்டியலிலும் சேர்த்து வர செல்வமானது பெருகும். பணம், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், செல்வங்கள் என்று எல்லா ஐஸ்வர்யங்களும் உங்களை தேடி வந்தடையும். எவ்வளவு வறுமையில் இருப்பவர்களையும், இந்த எளிய பரிகாரம் நல்ல நிலைக்கு கொண்டு வந்து விடக் கூடியது.

இதையும் படிக்கலாமே:
30-01-2025 நாளை மூன்றாம் பிறை பரிகாரம்

ஒவ்வொரு வாரமும் நீங்கள் இதை செய்யும் பொழுதே உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை காண ஆரம்பிப்பீர்கள். வெள்ளிக்கிழமை மகாலட்சுமியின் வரவு நம் வீட்டில் இருக்கும் பிரச்சினைகளை விரட்டி அடிக்கும். இந்த பரிகாரம் செய்யும் பொழுது முடிந்தவரை மாமிசம் சாப்பிடுவதை குறைக்க வேண்டும். சமையலில் வெங்காயம், பூண்டு அதிகம் சேர்க்கக்கூடாது. அமங்கலமான வார்த்தைகளையும், அசுப பலன்களை கொடுக்கக் கூடிய செயல்களையும் எக்காரணம் கொண்டும் வீட்டில் செய்யக் கூடாது. இறைவனின் நாமங்களை உச்சரித்து, ஸ்லோகங்கள், மந்திரங்கள் போன்றவற்றை ஜபித்து, முழு பக்தியோடு செய்யும் பொழுது, இதற்கான பலன்களும் முழுமையாக கிடைக்கும்.

- Advertisement -