- Advertisement -
- Advertisement -

முருகர் வழிபாட்டிற்கு பல நாட்கள் இருந்தாலும் திதிகளில் சஷ்டி திதி மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சஷ்டி திதியானது மாதத்தில் இரண்டு முறை வரும் ஒன்று வளர்பிறை திதி மற்றொன்று தேய்பிறை திதி. அப்படி வழிபடக் கூடிய இந்த சஷ்டி திதியில் முருகனுக்கு நாம் ஏற்றக் கூடிய ஒரு தீபம் நம்முடைய அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் என்று சொல்லப்படுகிறது.

பக்தர்கள் மனம் உருகி கேட்டால் கேட்டதை கொடுக்கக் கூடிய அற்புதமான கடவுள் முருகப்பெருமான். அப்பேற்பட்ட கருணை உள்ளம் கொண்ட கடவுளை அவருக்கே உகந்த திதியில் வழிபடும் போது நாம் கேட்டவற்றை நிச்சயம் அவர் உடனே தருவார் என்று சொல்லப்படுகிறது. அந்த வழிபாட்டை எப்படி செய்வது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சஷ்டி திதி வழிபாடு

பெரும்பாலும் சஷ்டி என்றால் வருடத்திற்கு ஒருமுறை அனுஷ்டிக்கப்படும் சஷ்டி விரதம் தான் அனைவரும் ஞாபகத்திற்கும் வரும். ஆனால் மாதந்தோறும் வரும் இந்த சஷ்டி திதியிலும் அவரை எளிமையாக வழிபாடு செய்யலாம் அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் இந்த வழிபாடு எந்த தினத்தில் வந்தாலும் அன்றைய நாளில் மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் 7:30 மணிக்குள்ளாக இதை செய்ய வேண்டும்.

இந்த வழிபாட்டிற்கு நீங்கள் ஒரே ஒரு தீபம் மட்டும் தான் ஏற்ற வேண்டும். அதற்கு ஒரு புது அகலை வாங்கிக் கொள்ளுங்கள். அந்த அகல் வைப்பதற்கு ஒரு தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு மண் தட்டை தவிர வேறு எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அடுத்ததாக கொஞ்சம் மருதாணி இலை மூன்று ஏலக்காய் கொஞ்சம் பச்சை கற்பூரம் இவையெல்லாம் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக ஏதேனும் செய்ய முடிந்தால் செய்யுங்கள் அல்லது ஒரு டம்ளர் தண்ணீரை வைத்தால் கூட போதும்.

- Advertisement -

சஷ்டி திதி அன்று மாலை 6:30 மணிக்கு மேல் பூஜை அறையில் வாங்கி வைத்திருக்கும் தட்டிற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு தட்டில் கொஞ்சம் மருதாணி இலையை பரப்பி அதில் ஏலக்காயும் பச்சை கற்பூரத்தையும் போட்டு விடுங்கள். இப்போது நீங்கள் வாங்கி வைத்திருக்கும் புது அகலுக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பஞ்சு திரி, தாமரைத் தண்டு திரி இரண்டையும் ஒன்றாக போட்டு நெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள்.

இந்த தீபம் பூஜை அறையில் எரியும் போது வேறு எந்த தீபமும் எறிய கூடாது அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த ஒரு தீபம் மட்டும் தான் எரிய வேண்டும். அந்த தீபம் கிழக்கு பார்த்து எரியட்டும். இப்போது இந்த தீபத்தின் முன் அமர்ந்து ஓம் எனும் பிரணவ மந்திரத்தை 108 முறை மனதார சொல்லுங்கள். அப்போது உங்களுக்கு என்ன தேவையோ அதை முருகனிடம் கேளுங்கள். எதைக் கேட்டாலும் கிடைக்கும் என்று எண்ணத்தில் உங்கள் சக்திக்கு மீறியதோ தேவை இல்லாதவற்றை எல்லாம் நினைத்து வேண்டுதல் செய்தால் அது பலிக்காது.

- Advertisement -

இந்த முறையில் மூன்று சஷ்டியில் முருகரை வழிபாடு செய்ய வேண்டும். விளக்கு மட்டும் ஒவ்வொரு சஷ்டியின் போதும் புதிதாக வாங்குங்கள். பழைய அகல் விளக்கை வீட்டில் மற்ற நேரங்களில் ஏற்ற பயன்படுத்திக் கொள்ளலாம்.அதே போல் மருதாணி ஏலக்காய் பச்சை கற்பூரம் இவற்றை தூள் செய்து வைத்துக் கொண்டு சாம்பிராணி போடும் போது போட்டு விடுங்கள். இது வீட்டிற்கு நல்ல ஒரு நேர்மறை ஆற்றலை கொடுக்கும். கண் திருஷ்டி தோஷங்களும் நீக்கும்.

இதையும் படிக்கலாமே: பிரச்சனை தீர வாராகி வழிபாடு

முருகரை இணைத்து எளிமையாக ஏற்றப்படும் இந்த தீப வழிபாட்டு முறையில் செய்து உங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -