- Advertisement -
சமையல் குறிப்புகள்

வெறும் 4 பொருள் இருந்தால் போதும். சுட சுட இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான வெங்காய தொக்கு தயார்.

- Advertisement -

வெறும் வெங்காயத்தை வைத்து சூப்பரான தொக்கு எப்படி செய்வது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த வெங்காயத் தொக்கை பக்குவமாக செய்து, பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்தால் 6 மாதம் வரை கூட கெட்டுப் போகாது. சுடச்சுட இட்லி, கல் தோசை, கோதுமை தோசை, இவைகளுக்கு தொட்டு சாப்பிட சூப்பரா இருக்கும். இதன் சுவை கொஞ்சம் வித்தியாசமாக இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு கலந்ததாக இருக்கும். ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

முதலில் 1/2 கிலோ வெங்காயத்தை எடுத்து முழுசாக தோலை உரித்து தண்ணீரில் போட்டு கழுவிக்கோங்க. தோல் உரித்த முழு வெங்காயத்தை ஒரு துண்டின் மேல் வைத்து ஈரத்தை நன்றாக துவக்கி விடுங்கள். அதன் பின்பு இந்த வெங்காயங்களை ஓரளவுக்கு பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். வெட்டிய வெங்காயம் – 1/2 கிலோ, வர மிளகாய் தூள் – 1 பெரிய டேபிள் ஸ்பூன், சிறிய எலுமிச்சை பழ அளவு – புளி, பெரிய எலுமிச்சம் பழ அளவு – வெல்லம், உப்பு தேவையான அளவு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை எழுது போல அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 50ml நல்லெண்ணெய் ஊற்றி, 2 ஸ்பூன் – கடுகு போட்டு பொரிந்த உடன், மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் வெங்காய தொக்கை எண்ணெயில் ஊற்றி கலந்து விடுங்கள். அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்து விடுங்கள். 15 லிருந்து 20 நிமிடங்கள் இந்த வெங்காய விழுது எண்ணெயிலேயே சுருள சுருள வதங்கி, சுண்டி தொக்கு போல நமக்கு கிடைத்துவிடும். திக்காக ஒரு பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, நன்றாக ஆற வைத்து பின்பு ஸ்டோர் செய்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அரை கிலோ அளவு வெங்காயத்தில் நீங்கள் இந்த தொக்கை தயார் செய்தாலும் உங்களுக்கு மிகக் குறைந்த அளவில்தான் கிடைக்கும். ஏனென்றால் வெறும் வெங்காயம் மட்டும் தானே இதில் சேர்த்து இருக்கின்றோம். முதலில் முதலில் அரைக்கிலோ அளவு வெங்காயத்தை வைத்து இந்த தொக்கே செய்து பாருங்கள்.

உங்களுக்கு பதம் சரியாக வந்தால், சுவை பிடித்திருந்தால் ஒரு கிலோ வெங்காயத்தில் இப்படி தொக்கு செய்து பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் தினம் தினம் சைடு டிஷ்ஷுக்கு தொந்தரவே இருக்காது. இனிப்பு புளிப்பு காரம் உப்பு, இந்த சுவைகளோடு சேர்ந்த வெங்காயத் தொகை செய்து ருசிக்க யாரும் தவறாதீர்கள்.

- Advertisement -