- Advertisement -
சமையல் குறிப்புகள்

துவரம் பருப்புடன் பாலக்கீரை சேர்த்து ஒரு முறை இப்படி கீரை கூட்டு செய்து கொடுங்கள். அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அமைதியாக சாப்பிடுவார்கள்

- Advertisement -

உடம்பிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் காய்கறி மற்றும் கீரை வகைகளில் அதிகமாக இருக்கிறது. எனவே வாரத்திற்கு இரண்டு, மூன்று நாட்களாவது கீரைகள், காய்கறிகள் இவற்றை உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய குழந்தைகளோ அசைவத்தை விரும்பி சாப்பிடும் அளவிற்கு சைவ உணவுகளை விருப்பமாக சாப்பிடுவதில்லை. அதிலும் காய்கறிகள், கீரைகள் என்றாலே அதனை ஒதுக்கி தான் வைக்கிறார்கள். இப்படி குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை செய்து கொக்க, அவர்களுக்கு பிடித்தமான சுவையில் சற்று காரம் குறைவாகவும் செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் விரும்பும் சுவையில் இந்த கீரைகூட்டை செய்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாமல் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதே இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கீரை – ஒரு கட்டு, துவரம்பருப்பு – 150 கிராம், வெங்காயம் – 2, தக்காளி – 3, பூண்டு – 5 பல், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரில் 150 கிராம் துவரம் பருப்பு சேர்த்து, அதனை இரண்டு, மூன்று முறை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் பருப்புடன் பூண்டுப்பல், மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து, 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட வேண்டும்.

பின்னர் குக்கரை மூடி விசில் போட்டு, அடுப்பின் மீது வைத்து, 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் சேர்க்க வேண்டும். பிறகு அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் வர மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பிறகு அதனுடன் நறுக்கிய கீரையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் தட்டு போட்டு மூடி, கீரை சுருண்டு வதங்கும் வரை வேக வைக்க வேண்டும். 5 லிருந்து 10 நிமிடத்திற்கு பிறகு கீரை நன்றாக வதங்கி விடும். பின்னர் உப்பு போட்டு நன்றாக கலந்துவிட வேண்டும். அதன் பின் குக்கரை திறந்து பருப்பை கரண்டி வைத்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

அதன்பின் இந்தக் கலவையை கீரையுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இவை அனைத்தும் சேர்ந்து ஒரு முறை நன்றாக கொதித்ததும், அடுப்பை அனைத்து விட வேண்டும். அவ்வளவு தான் சுவையான கீரை கூட்டு தயாராகிவிட்டது. இதனை சூடான சாதத்துடன் சேர்த்து கலந்து சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்.

- Advertisement -