- Advertisement -

வெற்றிகளை குவிக்கும் ஷோடச கலை நேரம்

- Advertisement -

சோடசக்கலை என்பது ஐந்து நொடிகள் மட்டுமே வரக்கூடிய ஒன்று. இது அமாவாசை மற்றும் பௌர்ணமி முடிந்த பிறகோ அல்லது முடிவதற்கு முன்பாகவோ வரும். அதனால் சரியாக கனிக்க முடியாது என்பதால் நம்முடைய சித்தர்கள் அமாவாசை மற்றும் பௌர்ணமி திதி நிறைவடைய கூடிய கடைசி ஒரு மணி நேரத்தையும் நிறைவடைந்த பிறகு வரக்கூடிய ஒரு மணி நேரத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு வழிபாடு செய்தார்கள். அப்படி செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் அதில் அந்த சோடச கலை நேரம் என்பது வந்துவிடும். சோடச கலை நேரத்தில் நாம் என்ன வேண்டுகிறோமோ அது அப்படியே நமக்கு நடக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஷோடச கலை நேரம்

திதி நிறைவடைவதற்கு முன் வரக்கூடிய ஒரு மணி நேரமும் நிறைவடைந்த பிறகு வரக்கூடிய ஒரு மணி நேரமும் என்று 2 மணி நேரமும் நாம் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் எந்த வேண்டுதலை மனதில் நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அது நமக்கு நிறைவேறும் என்று கூறப்படுகிறது. எந்த வேலையும் செய்யாமல் இப்படி இரண்டு மணி நேரம் அமைதியாக அமர்ந்திருப்பது என்பது மிகப்பெரிய விஷயம் அல்லவா? அதற்கு மாற்றாக தான் இந்த ஒரு எளிமையான வழிபாட்டு முறை திகழ்கிறது.

- Advertisement -

வைகாசி மாதத்தின் பௌர்ணமி என்பது ஜூன் மாதம் 11-ம் தேதி மதியம் 1:53க்கு நிறைவடைகிறது. அதனால் நாம் இந்த வழிபாட்டை ஜூன் மாதம் 11-ம் தேதி மதியம் 12 53 மணிக்கு செய்ய ஆரம்பித்து விட வேண்டும். இதற்கு நாம் ஒரு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். ஒரு சிறிய தட்டை எடுத்து நாளைய தினம் புதன்கிழமை என்பதால் புதன் பகவானுக்குரிய தானியமான பச்சைப்பயிரை பரப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக கிழியாத நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஒரு பிரியாணி இலையை எடுத்து அதில் “என்றும் வெற்றி எதிலும் வெற்றி” என்று எழுத வேண்டும். இப்படி எழுதிய இந்த பிரியாணிலையை தீபத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். அந்த இரண்டு மணி நேரம் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாம் எந்த வேலை செய்தாலும் நம் மனதிற்குள் என்றும் வெற்றி எதிலும் வெற்றி என்று கூறிக்கொண்டே இருக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி 2 மணி நேரமும் கூறி முடித்த பிறகு அந்த பிரியாணி இலையை எடுத்து அந்த தீபத்தில் காட்டி எரித்து அதன் சாம்பளை ஊதி விட வேண்டும் அல்லது தண்ணீரில் கரைத்து ஊற்றி விட வேண்டும். இப்படி நாம் இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக தீபத்தை ஏற்றி வைத்து இந்த வழிமுறையை பின்பற்றுவதால் சோடசகலை நேரத்திலும் நம்மை அறியாமலேயே நாம் அந்த வாக்கியத்தை கூறி இருப்போம். அந்த ஐந்து நொடிகள் நாம் கூறிய அந்த வார்த்தைகள் நம் வாழ்வில் அனைத்து விதமான வெற்றிகளையும் கொண்டு வந்து சேர்க்கும்.

இதையும் படிக்கலாமே:குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க செய்ய வேண்டிய தானம்

அற்புதமான சக்தி மிகுந்த சோடச கலை நேரத்தை பயன்படுத்தி பலரும் பலவிதங்களில் வெற்றி அடைந்திருக்கிறார்கள். நாமும் இந்த எளிமையான வழிமுறையை பின்பற்றி வெற்றி அடைவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -