- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

வீட்டில் இருக்கும் பெண்கள் செய்யும் இந்த சின்ன சின்ன தவறுகளால் கூட, அவர்களுக்கு சீக்கிரமே முதுமை தேற்றம் வந்து விடுமாம்.

- Advertisement -

முகத்தை அழகு படுத்த நாம் நிறைய வழிமுறைகளை கையாண்டாலும், அந்த வழிமுறைகள் உங்களுக்கு சரியான படி பயன் தர வேண்டும் என்றால் உங்கள் உடல் நிலை அதை எல்லாம் ஏற்று சரி செய்து கொள்ள தயாராக இருக்க வேண்டும். நாம் வீட்டில் தானே இருக்கிறோம் நமக்கு எதற்கு இதெல்லாம் என்று சலிப்புடன் இருந்தீர்கள் என்றால், உங்களின் முக அழகு கெட நீங்களே காரணம் ஆகி விடுவீர்கள். அப்படி நீங்கள் செய்யும் எந்தெந்த தவறுகளால் உங்கள் முக அழகு பாதிக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு மனிதன் வாழ்நாளில் எத்தனை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பது அவரவர் உடல் நிலையை பொறுத்து. ஆனால் குறைந்தது ஒரு நாளைக்கு ஏழு அல்லது எட்டு டம்ளர் தண்ணீர் கட்டாயமாக அருந்த வேண்டும். இது உடல் நலத்திற்கு மட்டுமல்ல முக அழகிற்கும் நல்லது போதுமான அளவு தண்ணீர் உங்கள் இருந்தால் தான் முகம் வறட்சித் தன்மை இல்லாமல் நல்ல பளபளப்பாக இருக்கும். இது மட்டுமின்றி உங்களுக்கு வயதான தோற்றம் வர தாமதம் செய்யும் ஒரு அற்புதமான மருந்தும் இந்த தண்ணீர்.

- Advertisement -

அடுத்து நாம் வெளியில் எங்கே செல்கிறோம், வீட்டில் இருக்கும் போது நம் முகத்தில் எப்படி அழுக்குத் தோன்றும் என நினைத்து குளிக்கும் போது மட்டும் முகத்தை கழுவினால் போதும் என்று நினைத்தால் அது பெரும் தவறு. வீட்டில் இருந்தாலும் முகத்தில் அழுக்கு படிய தான் செய்யும் இல்லை என்றாலும் நம் முகத்தில் இருந்து வெளியேறும் எண்ணெய் பசையை நாம் அடிக்கடி முகத்தை கழுவி துடைத்து விட வேண்டும். அதை அப்படியே விட்டால் முகத்தில் முகப்பருக்கள் தோன்றி முகத்தின் அழகை கெடுத்து விடும். ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை நல்ல தண்ணீர் கொண்டு கழுவுவது முகத்திற்கு நல்லது.

இதற்கு அடுத்ததாக உணவு பழக்கம் பெரும்பாலும் வெளியில் வேலைக்கு செல்பவர்கள் அந்தந்த நேரத்தில் உணவுக்கென்று இடைவேளை நேரம் இருக்கும் அந்த நேரங்களில் சாப்பிட்டு விடுவார்கள் ஆனால் வீட்டில் இருப்பவர்கள் அப்படியல்ல சாப்பிட்டு கொள்ளலாம் என்று அப்படியே விட்டு நேரம் தவறி தவறி சாப்பிடுவார்கள் இதுவும் உங்கள் உடல் அழகையும், முக அழகையும் பாதிக்க செய்யும். இது மட்டுமின்றி இந்த உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, தோள் மினுமினுப்பு வறட்சித் தன்மை இல்லாமல் இருப்பது போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

- Advertisement -

அனைத்திலும் விட மிக முக்கியம் சரியான தூக்கம் இப்போதெல்லாம் பெரும்பாலும் நேரத்தில் தூங்குவது இல்லை. ஒன்று நேரம் கடந்து தூங்குவது இல்லை இரவு நேரங்களில் தூங்காமல் கண் விழித்து வேலை பார்ப்பது இதை இரண்டுமே தவறு. இப்படி சரியான முறையில் தூக்கம் இல்லாத போது உங்கள் முகத்தின் தோள்கள் சுருங்கி விடும். கண்களை சுற்றி கருவளையம் தோன்றிவிடும். முகத்தில் தேவையில்லாத பருக்கள், வறட்சித் தன்மை போன்றவற்றால் முகத்தின் அழகு பல மடங்கு கெட்டு விடும்.

இதை அனைத்தையும் செய்த பிறகு சின்ன சின்ன உடற்பயிற்சிகளை நீங்கள் செய்யும் போது உங்கள் உடல் எப்போதும் நல்ல கட்டுக்கோப்புடன் ஆரோக்கியமாக இருப்பதுடன் முகத்தின் தசைகள் இறுகி பொலிவான வசீகர தோற்றம் கிடைக்க இந்த உடற்பயிற்சி மிகவும் அவசியம். இதில் முகத்திற்கென்று செய்யக்கூடிய தனி உடற்பயிற்சிகளும் உள்ளது. அதையும் கூட நீங்கள் செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: இந்த பொருள் முகத்தை மட்டும் இல்லைங்க, வெயிலால் கறுத்து போன உங்கள் பாத கருமையை கூட பத்தே நிமிடத்தில் போக்கி விடும் தெரியுமா?

இது அனைத்துமே வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டும் இல்லை வெளியில் வேலைக்கு செல்பவர்கள் சேர்த்து தான். ஆனால் பொதுவாக வெளியில் வேலைக்கு செல்லும் போது ஓரளவிற்கு அவர்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ளவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள். ஆனால் வீட்டில் இருப்பவர்களுக்குத் தான் நாம் வீட்டில் தானே இருக்கிறோம் நமக்கு எதற்கு இதெல்லாம்செய்ய வேண்டும் என்ற அலட்சியம் இருக்கும். இதனால் அவர்கள் உடல்நிலை பாதிப்பதோடு, முக அழகு முற்றிலும் பாதிப்படைந்து சீக்கிரமே முதுமை தோற்றம் வந்து விடும். இதை சரி செய்வதற்காகவே இந்த குறிப்புகள்.

- Advertisement -