இந்த பொருள் முகத்தை மட்டும் இல்லைங்க, வெயிலால் கறுத்து போன உங்கள் பாத கருமையை கூட பத்தே நிமிடத்தில் போக்கி விடும் தெரியுமா?

- Advertisement -

வெயிலில் அதிகமாக தொடர்ந்து வேலை செய்பவர்களுக்கு பாதங்களில் செருப்பு தடம் பதிந்த இடத்தை தவிர மற்ற இடங்கள் எல்லாம் கருப்பாக மாறிப் போயிருக்கும். அதிக அளவில் வெயிலில் அலைபவர்களுக்கு செருப்பின் இப்படி டிசைன் காலிலே இருக்கும். இதற்கென்று நாம் ஏதாவது கிரீம் போடும் போது முழுவதுமாக கருமையாக இருந்தால் சரியாகி விடும். இது ஒரு புறம் வெண்மையாகவும் மறுபுறத்தில் கருப்பாகவும் இருக்கும் போது என்ன தான் நாம் கிரீம், பேக் உபயோகித்தாலும் வித்தியாசம் தெரிய தான் செய்யும். இந்த பிரச்சனையை சரி செய்ய நம் வீட்டில் இருக்கும் பாண்ட்ஸ் பவுடர் உதவி செய்யும் என்ன கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இதற்கான இந்த பேக் தயார் செய்ய பான்ஸ்சுடன் சேர்த்து சில பொருட்களையும் கலந்து தான் தேய்க்க வேண்டும். சில பொருட்கள் என்றவுடன் பயந்து விட வேண்டாம். அனைத்தும் நாம் தினமும் வீட்டில் உபயோகப்படுத்தும் சின்ன, சின்ன பொருட்கள் தான். இதற்காக கடையில் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

- Advertisement -

இந்த பேக் தயார் செய்ய முதலில் ஒரு சின்ன பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ரூபாய் ஷாம்பு பாக்கெட் ஒன்றை எடுத்து அதில் உள்ள ஷாம்புவை எடுத்துக் கொள்ளுங்கள் போதும். அடுத்ததாக நீங்கள் பயன்படுத்தும் எந்த டூத் பேஸ்ட் ஆக இருந்தாலும் அதிலிருந்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இது இரண்டையும் நன்றாக கலந்து கொண்ட பிறகு, பான்ஸ் பவுடர்லிருந்து ஒன்றரை ஸ்பூன் அளவிற்கு எடுத்து அதையும் இந்த இரண்டுடன் சேர்த்து கொள்ளுங்கள். இது அனைத்தையும் சேர்த்து கலக்க ஒரு இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அனைத்தையும் சேர்த்து நல்ல பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு உங்கள் பாதங்களில் இதை அப்ளை செய்யும் முன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மறுபடியும் ஒருமுறை கலந்து கொண்ட பிறகு வெயிலினால் செருப்புத் தடம் பதிந்த அந்த கருமை இடங்களில் மட்டும் இந்த கிரீமை தேய்த்து வாருங்கள். உங்கள் பாதங்களில் நிறம் முழுவதும் ஒரே மாதிரியாக மாறிவிடும்.

- Advertisement -

இந்த பேக்கை தயார் செய்து ஒரு வாரம் வரை கூட நீங்கள் வைத்திருந்து உபயோகப்படுத்தலாம். காலில் தேய்க்கும் போது மட்டும் தேங்காய் எண்ணெய் சேர்த்து பிறகு தேய்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: முடி கொத்து கொத்தாக கொட்டுவதை தடுத்து நிறுத்த, இந்த 5 குறிப்புகளும் கூட உங்களுக்கு கை கொடுக்கும்.

இப்படி பாத கருமையை போக்க இவ்வளவு எளிமையான முறை இருக்கும் போது இனி நீங்கள் வெயிலில் அலைந்து உங்கள் நிறம் இப்படி கறுத்து போவதை பற்றி கவலைப்பட வேண்டாம். இதில் முக்கியமான குறிப்பையும் தெரிந்து கொள்ளுங்கள். பாதங்களில் மட்டும் தான் இதை பயன்படுத்த வேண்டும். வெயிலில் அலைந்த கருமை நிறம் போக்கும் கிரீம் தானே என்று நினைத்து இதை முகத்தில் தேய்த்து விடாதீர்கள்.

- Advertisement -