- Advertisement -

செல்வம் பெருக வீட்டில் விளக்கு ஏற்றும் முறை!

- Advertisement -

செல்வ வளம் பெருக தினமும் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே! காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் தவறாது விளக்கேற்றி வைக்கும் இல்லங்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. இதனால் வந்த துன்பங்கள் வந்த வழியே செல்லும். பணவரத்து தடை இல்லாமல் நிகழும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. இவ்வாறான விளக்கேற்றுதல் முறையில் இந்த விஷயத்தை கடைபிடிக்கும் பொழுது 16 செல்வங்களும் குறைவில்லாமல் கிட்டும். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாக தினமும் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். ஆனால் இப்பொழுதெல்லாம் பெரும்பாலானோர் தினமும் விளக்கேற்றுதல் என்னும் முறையை கடைபிடிப்பது கிடையாது. கால மாற்றத்தால் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் இந்நிலையில் விளக்கு ஏற்றுவதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்க யாருக்கும் போதுமான நேரம் இருப்பதில்லை.

- Advertisement -

சிலர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் விளக்கேற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். ஆனால் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி பொருளாதார ரீதியாக நீங்கள் நல்ல நிலைக்கு வருவதற்கு தினமும் விளக்கேற்றி வைப்பது முறையாகும்.

தினமும் காலையில் விளக்கேற்றி வைத்த பின்பு அதில் இருக்கும் எண்ணெய் தீர்வதற்குள் மீண்டும் எண்ணெயை ஊற்றி வைக்க வேண்டும். நீங்கள் உபயோகிக்கும் தீப எண்ணெய் பரிசுத்தமானதாக நல்ல எண்ணெயாக இருக்க வேண்டும். கண்ட கண்ட எண்ணெய்களை தீபத்திற்கு பயன்படுத்தக் கூடாது. பஞ்சலோக எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபடுபவர்களுக்கு பஞ்சம் தீரும் என்னும் நம்பிக்கையும் உண்டு.

- Advertisement -

விளக்கு ஏற்றி வைத்த பின்பு சுமார் இரண்டு மணி நேரம் ஆவது தீபம் நின்று எரிய வேண்டும். தீபத் திரியை ஒற்றையாக அல்லாமல் இரண்டு திரிகளை ஒன்றாக முறுக்கி பின்னர் எண்ணெயில் சேர்த்து தீபத்தை ஏற்றுவது நல்லது. இதனால் குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் நடக்கக் கூடிய பிரச்சனைகள் குறையும் என்பது நம்பிக்கை.

ஒற்றை திரியில் தீபம் ஏற்றினால் குடும்பத்திற்கு ஆகாது. இரட்டை திரியை ஏற்றும் பொழுது கணவன் மனைவிக்குள் அன்னோன்யம் ஏற்படும். எண்ணெய் தளதளவென்று எப்பொழுதும் தீபத்தில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். எண்ணெய் தீர்ந்து போவது அல்லது திரி எரிந்து போவது போன்றவை ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். இவை அபசகுணம் ஆகும்.

இதையும் படிக்கலாமே:
வசீகரமான முகத்தைப் பெற டிப்ஸ்

மாலையில் அதே போல விளக்கேற்றும் பொழுது எண்ணெய் நிறைந்து காணப்பட வேண்டும். இப்படி எண்ணெயை தீபத்திலிருந்து குறைய விடாமல் பாதுகாத்து வீட்டில் தீபம் ஏற்றி வந்தால் செல்வமும் உங்களை விட்டு குறையாது சேர்ந்து கொண்டே இருக்கும். சேர்த்து வைக்கும் பணமும் வீணாக விரயம் ஆகாது. இது போல தொடர்ந்து தினமும் விளக்கேற்றி வந்தால் மகாலட்சுமி எவ்வளவு நேரம் ஆனாலும் உங்கள் இல்லத்திலேயே நிரந்தரமாக வாசம் செய்வது நிச்சயம். பிரார்த்தனையை விட சிறந்த சக்தி எதுவும் இல்லை உங்கள் பிரச்சனைகளை விளக்கேற்றி வைத்து கடவுளிடம் ஒப்படைத்து விடுங்கள் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதால் எதுவும் மாறப் போவதில்லை.

- Advertisement -