- Advertisement -

எதிர்பாராமல் ஏற்படும் விபத்தில் இருந்து தப்பிக்க மந்திரம்

- Advertisement -

சமீப காலமாகவே பயணம் என்று சொன்னால் மனதில் பயம் தான் வருகிறது. இன்றைய சூழ்நிலையில் பயணங்களின் போது நிறைய ஆபத்துகள் எதிர்பாராமல் ஏற்பட்டு விடுகிறது. வீட்டில் இருந்து கிளம்பி செல்லக்கூடிய இடத்திற்கு, நல்லபடியாக சென்றுவிட்டு, வீடு திரும்புவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல.

அதிலும் இப்போது ஆபத்துக்கள் எந்த ரூபத்தில், யாருக்கு எப்படி வரும் என்றே சொல்ல முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. வீதியில் ஓரமாக நடந்து செல்பவனுக்கு கூட, உயிருக்கு ஒரு உத்திரவாதம் கிடையாது. இப்படிப்பட்ட சூழலில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள என்ன செய்வது. இதற்கு ஆன்மீகத்திலும் ஒரு சில எளிமையாக வழிபாட்டு முறைகள் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

பயணத்தின் போது எதிர்கொள்ளும் ஆபத்துக்களை தடுக்க ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு மந்திரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது, குலதெய்வத்தை வேண்டி கிளம்ப வேண்டும். பிறகு பின் சொல்ல கூடிய இந்த மந்திரத்தை ஒரே ஒரு முறை படிக்க வேண்டும். இந்த மந்திரத்தை படித்துவிட்டு வெளியே சென்றால் நம்முடைய பயணம் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

பயணத்தின் போது சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் நமோ அங்காரகாய
ஓம் நமோ அங்காரகாய
ஓம் நமோ அங்காரகாய

- Advertisement -

ஓம் நமோ குஜாய
ஓம் நமோ குஜாய
ஓம் நமோ குஜாய

ஓம் நமோ மங்களாய
ஓம் நமோ மங்களாய
ஓம் நமோ மங்களாய

- Advertisement -

ஓம் நமோ வாகனாய
ஓம் நமோ வாகனாய
ஓம் நமோ வாகனாய

ஓம் நமோ ராகுவே
ஓம் நமோ ராகுவே
ஓம் நமோ ராகுவே

இந்த மந்திரத்தை வீட்டிற்குள்ளேயே சொல்லி முடித்துவிட்டு நிலை வாசல் படியை தாண்டும் போது குலதெய்வத்தை நினைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நம் வீட்டு நிலை வாசல் படியில் குலதெய்வம் நம்மை காப்பதற்காக தங்கி இருக்கும் என்பது நம்பிக்கை. பரிகாரம் இவ்வளவுதான். தினமும் நீங்கள் பயணம் செய்து வேலைக்கு வியாபாரத்திற்கு செல்பவர்களாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை பின்பற்றலாம்.

அல்லது நெடுதூர பயணம் செய்ய வேண்டும் இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் பயணம் எனும் பட்சத்தில் முதல் நாள் இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு, வீட்டிலிருந்து கிளம்பும் பட்சத்தில் உங்களுடைய பயணம் எந்த ஒரு அசௌகரிமும் இல்லாமல், சௌகரியமாக இருக்கும். நீங்கள் செல்லும் காரியமும் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள மந்திர வரிகளை அதேபோல படியுங்கள். எண்ணிக்கையை கூடவோ குறைக்கவும் வேண்டாம். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பதிவு மிக மிக நல்ல பலனை தரும். சில பேருக்கு எல்லாம் வண்டியை எடுத்தாலே விபத்து தான். டூவீலரை கொண்டு போய் எந்த இடத்தில் ஆவது முத்தாமல் திரும்பவும் கொண்டு வந்து வைக்கவே மாட்டார்கள்.

இதையும் படிக்கலாமே: நோய்கள் தீர தெய்வ வழிபாடு ரகசியம்

இரத்த காயம் ஏற்பட்டு கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் மறக்காமல் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். தினமும் சொல்லுங்கள். 48 நாள் தொடர்ந்து இந்த மந்திரத்தை சொல்லும்போது அந்த மந்திரம் உங்களுக்கு சித்தியாகும். விபத்துக்கள் மேலும் மேலும் நடக்காமல் தடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -