ஹிந்து சாஸ்திரத்தில் ஒவ்வொரு தெய்வமும், ஒவ்வொரு விதமான சக்தியும், அதற்குரிய பலன்களையும் கொடுக்க வல்லதாக அமைந்திருக்கின்றன. சாஸ்திரங்களின்படி ஒரு நோய்க்கு தீர்வு தரக் கூடிய தெய்வங்களை வழிபட்டால் தான் அதற்கு உரிய பலன்களையும் நாம் விரைவாக அனுபவிக்க முடியும். அந்த வகையில் எந்த தெய்வத்தை, எந்த கிழமையில் வழிபட்டால், எந்த நோய் தீரும்? என்னும் ரகசியங்களை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.
பொதுவாக நோய் நொடிகள் தீருவதற்கு அம்மன் கோவில்களில் அந்தந்த உறுப்புகளை தகட்டில் தயாரித்து வைத்திருப்பார்கள். உதாரணத்திற்கு கண் தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள் கண்மலர் ஒன்றை வாங்கி பூஜை செய்து வழிபடுவார்கள். கை, கால் பிரச்சனைகள் இருப்பவர்கள் கை, கால் உருவ தகட்டை வாங்கி பூசாரியிடம் கொடுத்து பூஜை செய்து வழிபட்டு வருவார்கள். வயிற்றுப் பிரச்சினைகள் இருப்பவர்கள் வயிற்றில் மாவிளக்கு ஏற்றி வழிபடுவார்கள்.
இது போன்ற ஒவ்வொரு பிரச்சனைக்கும், ஒவ்வொரு விதமான தெய்வங்களிடமிருந்து நமக்கு பலன்கள் கிடைக்கும். குறிப்பிட்ட இந்த கிழமையில் நீங்கள் இந்த தெய்வத்தை வழிபடும் பொழுது, இந்த நோய் தீரும் என்னும் நம்பிக்கையும் நிலவுகிறது. தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி, ஜுரம் வந்தால் அதற்கு கணபதியை வழிபடுவார்கள். பிள்ளையாருக்கு ஜுரஹர கணபதி என்கிற ஒரு ரூபம் உண்டு. சில கோவில்களிலும் இவருக்கு தனி சன்னதிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த ஜுரஹர கணபதியை வழிபட்டால் உடனே ஜுரம் குறையும் என்பது ஐதீகம். இவரை திங்கள் மற்றும் புதன் கிழமையில் வழிபட்டால் விரைவாக நோய் தீரும்.
வாயு தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள், வயிறு சம்பந்தப்பட்ட வலிகளை கொண்டவர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டால் மனோதிடமும், உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். இந்த ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் வெற்றிலை அல்லது வடை மாலை சாற்றி வழிபடுங்கள், வாயு பிரச்சனை தீரும்.
வாதம் தொடர்பான கோளாறுகள் நீங்க சனிக்கிழமையில் சனி பகவானையும், திங்கட்கிழமையில் ராகு கால வேளையில் சிவபெருமானையும் வழிபட்டால் முற்றிலும் நிவாரணம் காணலாம். ரத்த சோகை உள்ளவர்கள், ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளில் வாடுபவர்கள் செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானை வழிபட்டு வருவது சிறப்பான பலன்களை கொடுக்கும்.
ஞாயிறு மற்றும் திங்கட் கிழமையில் கருமாரியம்மன், துர்க்கை அம்மன், இதயலீஸ்வரர், சக்தி தெய்வங்களை வழிபடுபவர்களுக்கு இதயம் தொடர்பான எந்த பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். மாரடைப்பு வந்தவர்களும், மாரடைப்பு வராமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இவர்களை வழிபட்டு பயனடையலாம். புற்றுநோய் இருப்பவர்களும் திங்கட் கிழமையில் சிவபெருமானை வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால் நல்ல நிவாரணம் பெறலாம்.
இதையும் படிக்கலாமே:
நன்றாக படிக்க நாயுருவி குச்சி பரிகாரம்
நீரிழிவு நோய், பித்தப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சிறுநீரகக் கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள், அதிலிருந்து நல்ல நிவாரணம் காணலாம். பெண்களுக்கு வரும் மாதவிடாய் கோளாறுகள், மாத கோளாறுகள் எதுவாகினும் நீங்க ராஜராஜேஸ்வரி தாயார், வள்ளி, ஸ்ரீரங்கநாத பெருமானை வழிபட்டு வந்தால் உடனே நிவாரணம் காணலாம். மரண பயம், எம பயம் நீங்க அஷ்டமி திதியில் தேய்பிறை நாளில் பைரவரை வழிபட்டு வருவது நல்ல பலன் தரும்.