- Advertisement -
இன்றைய செய்திகள்

தாக்குதலுக்கான காரணம் இதுதான். இதற்காகவே முன்கூட்டி தாக்குதல் நடத்தினோம் – வெளியுறவு செயலர் டெல்லியில் விளக்கம்

புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்திய விமானப்படை இன்று அதிகாலை சரியாக 3.30 மணி அளவில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தியது. முசாபராபாத் என்னும் பகுதியில் நடந்த இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த தாக்குதல் மிராஜ் 2000 எனும் 12 போர் ரக விமானங்கள் மூலம் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 1000 கிலோ வெடிகுண்டை ஜெய்ஷ்-இ-முகமது முகாம்களின் மீது வீசி இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்த முகம் முழுவதும் அழிந்து விட்டதாக தகவல்கள் வெளியானாலும் பாகிஸ்தான் ராணுவம் அவ்வளவே பெரிய சேதம் எதுவும் இல்லை என்று மழுப்பி வருகிறது. இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்த விளக்கத்தினை இந்தியாவின் வெளியுறவு செயலர் விஜய் கோகலே டெல்லியில் பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் ஆகியோரது முன்னிலையில் அளித்து வருகிறார்.

- Advertisement -

அதில் விஜய் கோகலே கூறியதாவது : புல்வாமா தாக்குதல் நடந்தபோது அந்த தாக்குதலுக்கான விளக்கம் மற்றும் தீவிரவாத அமைப்பை நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று பாகிஸ்தான் அரசிடம் முறையிட்டு இருந்தோம். ஆனால், இத்தனை நாட்கள் ஆகியும் முறையான பதில் இதுவரை வரவில்லை. மேலும், ஜெய்ஷ்-இ-முகமது மீண்டும் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த போவதாக உளவுத்துறையின் மூலம் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்தன.

இதற்குமேலும் காலம் கடத்தினால் இந்தியப்படை பலம் அவ்வளவு தான் என்று நினைத்து அவர்கள் அடுத்த தாக்குதலை நடத்துவார்கள். அதனால் தான் இந்திய விமானப்படை இன்று அதிகாலை அவர்களின் எல்லைக்குள்ளே ஊடுருவி சென்று பெரிய தாக்குதலை நிகழ்த்தியது. இந்த தாக்குதல் மூலம் அவர்களுக்கு இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தினால் அவர்கள் திருப்பி பலமாக அடிப்பார்கள் என்று புரியும் என்று விஜய் கோகலே விளக்கம் அளித்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

Indian air force attack : பசங்க நல்லா விளையாடி இருக்காங்க. இன்னும் அடிங்க – சேவாக் ட்வீட்

- Advertisement -
Published by