
நாளைய தினம் 12.10.2024 சனிக்கிழமை வந்திருக்கக்கூடிய விஜயதசமி திருநாளில் நாம் துவங்க வேண்டிய நல்ல விஷயங்களை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தசமி என்பது பத்தாவது நாள். நவராத்திரியின் இந்த பத்தாவது நாளை வெற்றி திருநாளாக கொண்டாடுகின்றோம்.
விஜய என்பது வெற்றி என்ற வார்த்தையை குறிக்கின்றது. வெற்றி தரும் இந்த தசமி நாளில், புதுசாக எந்தெந்த விஷயத்தை துவங்கலாம், புது விஷயங்களை துவங்குவதற்கு முன்பு எந்த கடவுளை வழிபாடு செய்து விட்டு துவங்க வேண்டும். ஆன்மீகம் சார்ந்த சில தகவல்கள் உங்களுக்காக.
நாளைய தினம் குழந்தைகள் தங்களுடைய வித்யா ஆரம்பத்தை தொடங்குவார்கள். அதாவது புதுசாக பள்ளிக்கூடம் செல்லக்கூடிய குழந்தைகள் நாளைய தினம், அந்த கல்வியை துவங்குவது என்பது சிறப்பான பலனை தரும். இது நாம் எல்லோருக்கும் தெரியும். வெறும் கல்வியை மட்டும் தான் நாளைய தினம் துவங்க வேண்டுமா. இல்லை, நாளை நீங்கள் புதுசாக தொழில் தொடங்கலாம், உங்கள் மனதிற்கு பிடித்த, வாழ்க்கைக்கு முன்னேற்றத்திற்கு தேவையான அத்தனை நல்ல விஷயங்களையும் நாளை நீங்கள் துவங்கலாம்.
உதாரணத்திற்கு நிறைய பணம் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால், மஞ்சள் நிறத்தில் ஒரு உண்டியலை நாளைய தினம், உங்கள் வீட்டில் வாங்கி வையுங்கள். அதன் உள்ளே முதலில் இரண்டு வெந்தயத்தை போட்டு, இன்றிலிருந்து இந்த சேமிப்பை நான் துவங்குகின்றேன். என்னுடைய வீண் செலவை இன்றிலிருந்து நான் குறைக்க போகின்றேன் என்று அந்த பராசக்தி தேவியிடம் உறுதிமொழி எடுத்துக் கொண்டு, பணத்தை சேமிக்க தொடங்கினாலும் உங்களுடைய சேமிப்பு வெற்றியில் முடியும்.
நாளை சேமிப்பிற்காக வங்கி கணக்கு துவங்க ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்து ஒதுக்கி வைக்கலாம். நாளைக்கு வங்கி விடுமுறை ஆகவே கணக்கு துவங்க முடியாது ஒரு ரூபாயை வங்கியில் சேமிக்க வேண்டும் என்பதற்காக எடுத்து வைக்கலாம். உங்களுக்கு நாளையிலிருந்து சேமிப்பு துவங்கினாலும் அந்த சேமிப்பானது பல மடங்கு உயரம் என்பது நம்பிக்கை துர்க்கை லட்சுமி சரஸ்வதி மூன்று தேவைகளும் சங்கமித்து பராசக்தியாக அவதரித்த இந்த நாளில் அனைவருக்கும் இறைவனின் ஆசீர்வாதங்கள் கிடைக்கப்பெறும்.
நாளைய தினம் அதே போல கட்டாயமாக குலதெய்வ வழிபாட்டை செய்துவிட்டு, பிறகு உங்களுடைய புது முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வலது உள்ளங்கை நிரம்ப கல்லுப்பு எடுத்துக்கொண்டு, கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு, ‘ஓம் குலதெய்வமே வசி வசி’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லிவிட்டு, கையில் இருக்கும் கல்லுப்பை சுத்தமான நீரில் கரைத்து விட்டு, உங்களுடைய புதிய ஆரம்பங்களை நாளைய தினம் துவங்கும் போது, உங்களுக்கான வெற்றி பல மடங்கு பிரம்மாண்டமாக உங்களை வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: புரட்டாசி கடைசி சனிக்கிழமை வழிபாடு
நாளை எந்த நல்ல வேலையை துவங்குவதாக இருந்தாலும் சரி, அந்த வேலையை துவங்குவதற்கு முன்பு இந்த குலதெய்வ பரிகாரத்தை செய்யுங்கள். அப்படி இல்லை என்றால், நாளை காலையில் எழுந்த குளித்து சுத்தமான உடனேயே, இந்த குலதெய்வ பரிகாரத்தை செய்துவிட்டு, பிறகு விஜயதசமி வேலையை துவங்குங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.