
நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவிதமான கஷ்டங்களையும், சிக்கல்களையும், பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய அற்புதமான சிறப்பு மிகுந்த கடவுளாக திகழ்பவர் தான் விநாயகர் பெருமான். அனைவருக்கும் மூத்தவராகவும் முழுமுதற் கடவுளாகவும் திகழக்கூடிய விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாளாக திகழ்வதுதான் ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி. அன்றைய தினத்தில்தான் விநாயகர் அவதரித்தார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அன்றைய தினத்தை நாம் விநாயகர் சதுர்த்தி என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த விநாயகர் அவதரித்த நாளில் விநாயகருக்கு நாம் செய்யக்கூடிய வழிபாடுகள் நம் வாழ்வை மாற்றும். அப்படி வாழ்வை மாற்றுவதற்கு உதவக்கூடிய விநாயகர் வழிபாட்டுள் ஒன்றாக திகழக்கூடிய பணவரவை அதிகரிக்கும் பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
விநாயகரை மனதார நினைத்துக் கொண்டு நாம் செய்யக்கூடிய எந்த ஒரு காரியமும் வெற்றி அடையும் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட விநாயகருக்குரிய விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை நினைத்துக் கொண்டு நாம் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்ற பரிகாரத்தை செய்யும் பொழுது அந்த பரிகாரம் பல மடங்கு வெற்றியடையும் என்றே கூறலாம். அந்த பரிகாரத்தின் மூலம் நமக்கு பணவரவு அதிகரிப்பதோடு நம் வாழ்வில் இருக்கக்கூடிய பணம் தொடர்பான அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும்.
இந்த பரிகாரத்தை அபிஜித் முகூர்த்தம் வரக்கூடிய நேரத்தில் செய்ய வேண்டும். அபிஜித் முகூர்த்த நேரம் என்பது மதியம் 11:45 மணியிலிருந்து 12:15 மணிக்குள் இருக்கிறது. இந்த நேரத்தில் நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அந்த காரியம் வெற்றிகரமாக நடைபெறும் என்று பொருள்படும். விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை நாம் எந்த நேரத்தில் செய்தாலும் இந்த பரிகாரத்தை அபிஜித் நேரத்தில் செய்வது என்பது சிறப்பு.
ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சரிசி மாவினால் பிள்ளையார் சுழி போட்டுக் கொள்ளுங்கள். கோலம் போடுவது போலவும் போடலாம் அல்லது தண்ணீரில் கரைத்து பிள்ளையார் சுழி போடுவதாக இருந்தாலும் போட்டுக் கொள்ளலாம். அதற்கு மேல் நல்ல கிலியாத வெற்றிலையாக பார்த்து ஒரு வெற்றிலையை எடுத்து அதன் காம்பு பகுதியை நீக்கி அதை பிள்ளையார் சுழியின் மேல் வைக்க வேண்டும். பிறகு விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்தமான நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத்தை வெற்றிலைக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் புதன் பகவானுக்குரிய பச்சைப் பயரையும் சிறிதளவு வைக்க வேண்டும். பிறகு ஒரு ரூபாய் நாணயத்தை பன்னீரில் சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து அதையும் வைத்து விடுங்கள்.
இப்பொழுது இதை அப்படியே விநாயகப் பெருமானின் படத்திற்கு முன்பாகவோ சிலைக்கும் முன்பாகவோ வைத்துவிட்டு பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று முழுமனதோடு விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். இந்த இனிப்பும் பச்சைப்பயிரும் ஒரு ரூபாய் நாணயமும் புதன்கிழமை முழுவதும் விநாயகருக்கு முன்பாகவே இருக்கட்டும். வியாழக்கிழமை அன்று காலையில் பச்சை பயிரையும் இனிப்பையும் காக்கை குருவி எறும்புகளுக்கு தானமாக போட்டு விட்டு ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் எடுத்து செலவு செய்யாமல் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய பண தோஷம் நீங்கும். பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் விலகும். பணவரவு பல மடங்கு அதிகரிக்கும்.
இதையும் படிக்கலாமே: விநாயகரின் அருளைப் பெற மந்திர வழிபாடு
சிறப்பான நேரத்தில் முழு முதற் கடவுளுக்கு இப்படி ஒரு பரிகாரத்தை செய்வதன் மூலம் பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டு எதிர்பார்க்காத பணவரவை பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.