
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு கிழமை சிறப்பு மிகுந்த கிழமையாக திகழ்கிறது. அந்த வகையில் விநாயகர் பெருமாளுக்கு சிறப்பு மிகுந்த கிழமையாக திகழ்வது திங்கட்கிழமை. திங்கட்கிழமை அன்று விநாயக பெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது அந்த வாரம் முழுவதுமே நமக்கு சிறப்பாக அமையும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட திங்கட்கிழமை அன்று விநாயகப் பெருமானை நாம் எந்த முறையில் வழிபட்டால் நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
விநாயகப் பெருமான் வழிபாடு என்பது பலரும் அறிந்த ஒன்று. விநாயகப் பெருமான் இல்லாத இல்லமோ கோவிலோ இருக்கவே இருக்காது. எவ்வளவு பெரிய கோவிலாக இருந்தாலும் சரி எவ்வளவு சிறிய கோயிலாக இருந்தாலும் சரி அந்த கோவிலில் விநாயகர் என்பவர் கண்டிப்பான முறையில் இருப்பார். அதனால் தான் அவரை முழு முதற்கடவுளாக நாம் கூறுகிறோம். அதே போல் ஒவ்வொரு இல்லத்திலும் ஏதாவது ஒரு ரூபத்தில் விநாயகர் இருக்கத்தான் செய்வார். அப்படிப்பட்ட விநாயகரை வீட்டிலேயே வழிபடக்கூடிய ஒரு எளிமையான முறை.
இந்த வழிபாட்டை நாம் திங்கட்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதுவும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது ஆறு மணியில் இருந்து ஏழு மணிக்குள்ளோ இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டிற்கு நம்முடைய வீட்டில் விநாயகரின் படமோ, சிலையோ வேண்டும். இது தவிர்த்து நமக்கு அருகம்புல் வேண்டும். 21 அருகம் புல்லை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நுனியாக இருக்கும் 21 அருகம்புல்லை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் கிளைகள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் கிளைகள் இருப்பது போல் 21 அருகம்புல்லை பறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த 21 அருகம்புல்லையும் ஒரு நூலை வைத்து கட்டி விநாயகப் பெருமானுக்கு முன்பாக வைத்துவிட்டு விநாயகப் பெருமானுக்கு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு உங்களுடைய வேண்டுதல் என்னவோ பிரச்சனை என்னவோ அதை விநாயகப் பெருமானிடம் கூற வேண்டும்.
அவருக்கு நெய்வேத்தியமாக வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பொருள் உலர் திராட்சை, பேரிச்சம்பழம், கற்கண்டு, அவலீ, பொறி கடலை, போன்ற ஏதாவது ஒன்றை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இவை எதுவுமே இல்லை என்றால் நாட்டு சர்க்கரையை வைத்துக் கூட வழிபாடு செய்யலாம். இப்படி தொடர்ந்து 21 திங்கட்கிழமைகள் 21 அருகம்புல்லை வைத்து விநாயகருக்கு வழிபாடு செய்ய நம்முடைய வேண்டுதல்களும் பிரச்சனைகளும் தீரும்.
ஒரு வாரம் வைத்த அருகம்புல்லை அடுத்த வாரம் எடுத்து நம்முடைய வீட்டு நிலை வாசலில் வைத்துக் கொள்ளலாம். இப்படி நிலை வாசலில் வைப்பதன் மூலம் வீட்டிற்குள் எந்தவித தீய சக்திகளும் வராது என்று கூறப்படுகிறது. மேலும் வீட்டிலும் எந்த வித தீய சக்திகளும் இருக்காது.
இதையும் படிக்கலாமே:பணப் பிரச்சனை தீர வாராஹி அம்மன் வழிபாடு
முழு முதற் கடவுளான விநாயக பெருமானுக்கு உகந்த அருகம்புல்லை வைத்து வழிபாடு செய்ய நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.