- Advertisement -

தடைகள் நீங்கவும் பணவரவு அதிகரிக்கவும் விநாயகர் வழிபாடு

- Advertisement -

ஒருவர் மேற்கொள்ளும் காரியத்தில் எந்தவித தடைகளும் ஏற்படாமல் வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார். அப்படி அவர் செய்யும் காரியத்தில் தடை ஏற்பட்டுவிட்டது என்றால் அவர் உடனடியாக விநாயகப் பெருமானையோ அல்லது ஆஞ்சநேயரையோ வழிபாடு செய்ய வேண்டும். இவர்கள் இருவரும் தான் காரிய சித்திக்குரிய தெய்வங்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் இருவரையும் ஒருசேர வழிபடுவது என்பது மிகவும் சிறப்புக்குரியதாகவே திகழ்கிறது. எப்படி ஒரு சேர வழிபடுவது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

விநாயகர் வழிபாடு

விநாயகப் பெருமானை முழுமுதற் கடவுளாக நாம் கருதுகிறோம். அதே போல் ஆஞ்சநேயரையும் சிரஞ்சீவியாக நினைத்து வழிபாடு செய்கிறோம். இவர்கள் இருவருமே காரிய சித்தி அருளக்கூடிய தெய்வங்களாக திகழ்கிறார்கள். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் வழிபடக்கூடிய தெய்வங்களாகவும் இவர்கள் இருவரும் திகழ்கிறார்கள். இவர்களை நாம் தினமும் மனதார வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஆஞ்சநேயருக்கு உகந்த பொருளாக கருதப்படுவது செந்தூரம். இந்த செந்தூரத்தை ஆஞ்சநேயருக்கு நாம் வைத்து வழிபாடு செய்து பார்த்திருப்போம். இந்த செந்தூரத்தை நாம் ஆஞ்சநேயருக்கு வைத்து வழிபாடு செய்வதன் மூலம் ஆஞ்சநேயர் மனம் மகிழ்ந்து நமக்கு வேண்டிய வரத்தை தருவார் என்று கூறப்படுகிறது. ஸ்ரீ ராமர் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பதற்காக தான் ஆஞ்சநேயர் தன்னுடைய உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டாராம். நாமும் அதே முறையில் ஆஞ்சநேயருக்கு செந்தூரத்தை பூசி விடும்பொழுது ஆஞ்சநேயர் மனமகிழ்வார் என்று கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட செந்தூரத்தை விநாயகர் ஆலயத்திற்கு வாங்கிக் கொடுத்து விநாயகருக்கு சாற்ற வேண்டும். பிறகு தங்களுடைய பெயரில் அர்ச்சனைகள் செய்ய வேண்டும். இப்படி வழிபாடு செய்து முடித்துவிட்டு அந்த செந்தூரத்தை திரும்பவும் வாங்கி வந்து நம்முடைய வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் நம்முடைய நெற்றியில் இந்த செந்தூரத்தை வைத்துக்கொண்டு வெளியில் செல்ல வேண்டும்.

- Advertisement -

இப்படி சென்றோம் என்றால் ஆஞ்சநேயர் மற்றும் விநாயகப் பெருமானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைப்பதோடு மட்டுமல்லாமல் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் பணவரவு அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது. கஷ்ட காலத்தில் யாரை அழைத்தால் உடனே வருவார்கள் என்று கேட்டால் அதற்கு ஆஞ்சநேயர், விநாயகர் என்றுதான் கூறுவார்கள். இவர்கள் இருவரும் நமக்கு பரிபூரண அருளை தந்துவிட்டால் நம்முடைய வாழ்க்கையில் தோல்வி என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விடும்.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக ஆடி வெள்ளி வழிபாடு

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை விநாயகர் ஆலயத்தில் சதுர்த்தி தினத்தன்று செய்து வழிபாடு செய்தால் விரைவிலேயே விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் காரிய தடைகள் அனைத்தும் விலகும். பணவரவு அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -