- Advertisement -
- Advertisement -

முகத்தின் பாதுகாப்பை கருதி முகத்திற்கு கிரீம் மேக்கப் போன்றவை செய்வதற்கு முன்பாக சீரம் என்று ஒன்றை முகத்தில் தடவி கொள்கிறார்கள். இதை கடைகளில் வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே எப்படி எளிமையாக செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி அதிகமாக இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆரஞ்சு பழத்தில் எந்த அளவிற்கு சத்துகள் இருக்கிறதோ அதைவிட அதிகமாக ஆரஞ்சு பழ தோலில் சத்துக்கள் இருக்கிறது. இந்த தோலை பயன்படுத்தி வீட்டிலேயே சீரம் தயார் செய்யும் முறையை பார்ப்போம்.

- Advertisement -

சீரத்தை முகத்தில் தடவுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள்
இதனால் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் மறைகிறது. மேலும் வயதாகும் தோற்றத்தை குறைக்கிறது. மேலும் வயதாகாமல் பாதுகாக்கிறது. சூரிய ஒளி கதிர்களால் ஏற்படும் பிரச்சனைகளை நீக்குகிறது. ஹைப்பர் பிக்மென்டேசன் என்று சொல்லக்கூடிய கருந்திட்டுகளை நீக்க உதவுகிறது. முகத்தில் இருக்கக்கூடிய நிற ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சீரான நிறத்தை கொடுக்கிறது. சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளிலிருந்து முகத்தை காக்கிறது.

விட்டமின் சி சீரம் செய்முறை
முதலில் ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இருக்கும் தோலை நீக்கி அதை ஒருநாள் முழுவதும் வெயிலில் உலர்த்த வேண்டும். பிறகு ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பவுலில் உலர்த்திய இந்த ஆரஞ்சு பழ தோலை போட்டு அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் பன்னீரை ஊற்ற வேண்டும். பிறகு அதில் அரை டேபிள்ஸ்பூன் கிளிசரின் மூன்று விட்டமின் இ கேப்ஸ்யூல் போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

- Advertisement -

கலந்த இந்த கலவை இருக்கும் பவுலை காற்று போகாத அளவிற்கு நன்றாக மூடி போட்டு ஆறு மணி நேரம் ஊற விட வேண்டும். ஆறு மணி நேரம் கழித்து இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதை வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டி வைத்திருக்கும் இந்த சாரில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

ஜெல்லும் சாறும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலந்து ஒரு திக்கான பதத்திற்கு வரும். அவ்வளவுதான் விட்டமின் சி சீரம் தயாராகிவிட்டது. இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து எப்போதெல்லாம் முகத்தை சுத்தம் செய்து கிரீம் அல்லது மேக்கப் போடுகிறோமோ அதற்கு முன்பாக இந்த சீரமை முகத்தில் தடவி ஐந்து நிமிடத்திற்கு பிறகு கிரீமை பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிக்கலாமே: முடி உதிர்வை தடுக்க எண்ணெய்

காசு கொடுத்து கடையில் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்குவதற்கு பதிலாக நாமே நம் கை பட வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே சீரம் தயார் செய்து நம் முகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -