முடி உதிர்வை தடுக்க எண்ணெய்

hair oil apply
- Advertisement -

முன்பெல்லாம் ஒவ்வொருவருக்கும் முழங்காலுக்கு கீழே முடி கருகருவென்று நீண்டு வளர்ந்திருக்கும். அதை பார்க்கும் போதே அத்தனை அழகாக இருக்கும். இப்போதெல்லாம் அதிகமாக முடி இருப்பவர்களை பார்த்தால் அதிசயத்தை பார்த்து போல வாயை பிளக்கின்றோம். அந்த அளவிற்கு முடி வளர்ப்பதில் பிரச்சனைகள் உள்ளது.

இதனாலே பலரும் முடி வளர்க்க விருப்பப்படாமல் இருக்கிறார்கள். முடி நன்றாக வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதற்கான முறையான வழிமுறைகளையும் கையாள வேண்டும். முதலில் முடி உதிர்வை தடுக்க வேண்டும். அப்போது தான் முடி வளர்ச்சி அதிகரிக்க முடியும்.

- Advertisement -

முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்கஉணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் இந்த எண்ணெய் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் அதிகப்படியான முடி வளர்ச்சியை பெறலாம். அது என்ன என்னை எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை அழகு குறிப்பு குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முடி உதிர்வை தடுக்க

இதற்கு நாம் தயாரிக்கப் போகும் எண்ணெக்கு மூன்று பொருள்கள் தேவை. அது வெந்தயம், கருஞ்சீரகம், சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய். முதலில் மிக்ஸி ஜாரில் 3 ஸ்பூன் வெந்தயம், 3 ஸ்பூன் கருஞ்சீரகம் இரண்டையும் சேர்த்து நல்ல பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் 250 கிராம் எடுத்துக் கொள்ளுங்கள். இதில் பவுடர் செய்து வெந்தயத்தையும் கருஞ்சீரகத்தையும் கலந்து வைத்து விடுங்கள். இப்போது இதை சூடு படுத்த வேண்டும். சூடு படுத்த நேரடியாக அடுப்பில் வைக்காமல் டபுல் பாயில் முறையில் இந்த எண்ணெயை சூடு படுத்துங்கள்.

எண்ணெய் நன்றாக நிறம் மாறி வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு இதை அப்படியே ஆற விடுங்கள். இந்த எண்ணெய் நன்றாக ஆறிய உடன் ஒரு பாட்டிலில் ஊற்றி பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தலைக்கு குளிப்பதற்கு பத்து நிமிடத்திற்கு முன்பாக பஞ்சை இந்த எண்ணெய் தொட்டு எடுத்து உங்கள் முடி வேர்க்கால்களில் எல்லாம் லேசாக அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து ஒரு மசாஜ் கொடுத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு எப்போதும் போல ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலைமுடியை அலசி விடுங்கள். இதை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் முடி உதிர்வு பிரச்சனை உங்களை நெருங்காதோடு முடி வழுக்கை இளநரை போன்ற பிரச்சனைகளும் அறவே வராது.

கருஞ்சீரகம் இளநரை வருவது, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளை தடுப்பதுடன் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடிகளை வளர வைக்கும். அதே போல் வெந்தயத்தில் இருக்கும் புரோட்டின் சத்துக்கள் முடி உதிர்வை தடுக்க கூடியது. அது மட்டும் இன்றி உடலுக்கு குளிர்ச்சியையும் தரும்.

இதையும் படிக்கலாமே: முகம் தங்கம் போல் மின்ன ஃபேஸ் பேக்

இவற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்க்கும் பொழுது அபாரமான முடி வளர்ச்சி பெறலாம். முடி வளர பயன்படுத்தி இந்த எண்ணெய் தயாரிக்கும் முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் பயன்படுத்தி பலன் அடையுங்கள்.

- Advertisement -