- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

குளிக்கின்ற தண்ணீரோடு இந்த தண்ணீரை கலந்து விடுங்கள். சென்ட் போடாமல் கூட நாள் முழுவதும் வியர்வை துர்நாற்றம் இல்லாமல், வியர்த்து வடியாமல் பிரஷ்ஷாக இருக்கலாம்.

- Advertisement -

சில பேருக்கு உடல் முழுவதுமே லேசாக குறுகுறுவாக இருக்கும். அதாவது முகத்தில் வரும் பருப்போலவே கை, கழுத்து பகுதிகளில் கூட சின்ன சின்ன கொப்பளங்கள் இருக்கும். சில பேருக்கு காலையில் என்னதான் குளித்தாலும், குளித்த ஒரு மணி நேரத்திற்குள் அவர்களுடைய உடம்பில் துர்நாற்றம் வீச ஆரம்பித்து விடும். வியர்வை வடிய தொடங்கிவிடும். இயற்கையாகவே சில பேருடைய உடல் நிலை இப்படி அமைந்திருக்கும். மேல் சொன்ன எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கக்கூடிய ஒரு சுலபமான குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதோடு மட்டுமல்லாமல் இந்த குறிப்பை தொடர்ந்து பின்பற்றி வரும்போது உங்களுடைய சருமம் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே பளபளப்பாக ஜொலிக்க தொடங்கிவிடும்.

நேரத்தைக் கடத்தாமல் நேரடியாக குறிப்புக்கள் செல்வோம். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். ஏலக்காய் 5 இடித்தது, சோம்பு 1 டேபிள் ஸ்பூன், லேசாக நுணுக்கியது, பட்டை 2 துண்டு, வெட்டிவேர் 1/2 கைப்பிடி அளவு, இந்த எல்லா பொருட்களையும் அந்த தண்ணீரில் போட்டு தண்ணீரை கொதிக்க வையுங்கள். 1 லிட்டர் தண்ணீர் ஆனது 1/2 லிட்டர் அளவு தண்ணீர் வரும் வரை கொதிக்கட்டும்.

- Advertisement -

அவ்வளவுதான். நமக்கு தேவையான தண்ணீர் தயாராகிவிட்டது. இந்த தண்ணீரை நீங்கள் குளிக்கின்ற தண்ணீரோடு சேர்த்து கலந்து அப்படியே குளிக்கலாம். தாராளமாக சோப்பு போட்டு குளிக்கலாம். அப்படி இல்லை என்றால் சோப்பு போட்டு குளித்து முடித்த பின்பு, இறுதியாக இந்த தண்ணீரை அப்படியே நல்ல தண்ணீரோடு கலக்காமல் உங்களுடைய முகம் உடம்பு முழுவதும் ஸ்ப்ரே செய்து, அப்படியே ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் விட்டுவிட்டு ஒரு கப் நல்ல தண்ணீரை ஊற்றி வெறுமனே குளித்துக் கொள்ளலாம்.

நாம் இந்த தண்ணீரில் சேர்த்து இருக்கக்கூடிய பொருட்களின் வாசம் அனைத்தும் அப்படியே உங்கள உடம்பில் இருக்கும். இந்த வாசம் வியர்வை துர்நாற்றத்தை உண்டாக்காவது. வெட்டிவேர் குளிர்ச்சியை தரக்கூடிய பொருள். இந்த தண்ணீரை கொண்டு குளிக்கும் போது உங்களுடைய உடம்பில் வியர்க்கக்கூடிய தன்மையானது குறையும். அதாவது உங்களுடைய உடம்பு குளிர்ச்சி பெறும்.

- Advertisement -

தினமும் இந்த குறிப்பை பின்பற்றலாம். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பின்பற்றலாம். அது உங்களுடைய விருப்பம். சில பேர் வேலையில் இருந்து வந்த பிறகு ரொம்பவும் டயடாக இருப்பார்கள். முகம் எல்லாம் பொலி விழுந்து காணப்படும். அப்படிப்பட்டவர்கள் வேலையில் இருந்து வந்த பிறகு தயார் செய்த இந்த தண்ணீரை குளிக்கின்ற தண்ணீரில் ஊற்றி அந்த தண்ணீரில் அப்படியே குளித்து விட்டு வந்தால் அவ்வளவு பிரஷ்ஷாக ஃபீல் பண்ணுவீங்க. அப்படி இல்லை என்றால் இந்த தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவினால் கூட முகம் டக்குனு பிரெஷ்ஷா மாறும்.

இதையும் படிக்கலாமே: பித்தளை பாத்திரம், செம்பு பாத்திரம், எவர்சில்வர் பாத்திரம், சிங்க் இப்படி எல்லா வற்றையும் கை வலிக்காமல் ஒரு நிமிடத்தில் சுத்தம் செய்ய இந்த, 1 பவுடர் போதும்.

இந்த குறிப்பை தொடர்ந்து பின்பற்றி வந்தால் முகத்தில் இருக்கும், உடம்பில் இருக்கும் சுருக்கங்கள் எல்லாம் படிப்படியாக குறையும். சுருக்கம் வருவது தள்ளிப் போகும். அதோடு மட்டும் அல்லாமல் கண்ணுக்குத் தெரியாத கரும்புள்ளிகள் படிப்படியாக மறையும். உடம்பில் உள்ள பருக்கள் எல்லாம் கூடிய சீக்கிரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை உணர முடியும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா தொடர்ந்து மூன்று மாதங்கள் முயற்சி செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கொடுக்கும்.

- Advertisement -