பித்தளை பாத்திரம், செம்பு பாத்திரம், எவர்சில்வர் பாத்திரம், சிங்க் இப்படி எல்லா வற்றையும் கை வலிக்காமல் ஒரு நிமிடத்தில் சுத்தம் செய்ய இந்த, 1 பவுடர் போதும்.

silver-pithalai-pooja-items
- Advertisement -

இப்போதெல்லாம் நம்முடைய வீட்டு வேலைகளை எப்படி சுலபமாக முடிக்கலாம் என்று பார்ப்பதில் தான் நம்முடைய ஆர்வம் அதிகமாக இருக்கிறது. காரணம் வீட்டில் இருக்கும் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இப்போது சம்பாதிக்க தொடங்கி விட்டார்கள். ஏதோ ஒரு வேலையை செய்து பணம் காசு சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை. காரணம் இந்த கால சூழ்நிலையில் ஒருவர் மட்டும் சம்பாதித்து நிறைவான வாழ்க்கையை வாழ முடியாது என்று ஆகிவிட்டது. வேலைக்கு போகும் பெண்களுக்கும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் சரி கை வலிக்காமல் பாத்திரம் தேய்ப்பதற்கு ஒரு பவுடரை வீட்டிலேயே எப்படி தயார் செய்வது என்ற ஒரு சின்ன குறிப்பை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

இந்த குறிப்புக்கு நமக்கு தேவையான பொருட்கள் கோதுமை மாவு – 1 கப், கல் உப்பு – 1/4 கப், துணி துவைக்கும் பவுடர் – 1/4 கப், ஆப்ப சோடா மாவு – 1/4 கப், ஒரு டம்ளரில் கூட நீங்கள் மேல் சொன்ன பொருட்களை அளந்து எடுத்துக் கொள்ளலாம். (இதில் சில பேருக்கு துணி துவைக்கும் பவுடரை சேர்ப்பதற்கு விருப்பம் இல்லை என்றால், சபீனா என்று பாத்திரம் தேய்க்க கூடிய பவுடர் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி கூட துணி துவைக்கும் பவுடருக்கு பதிலாக நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.)

- Advertisement -

இந்த நான்கு பொருட்களையும் ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டிக் கொள்ளுங்கள். எல்லா பொருட்களும் கலந்து நமக்கு ஒரு பொடி கிடைத்து விடும். இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் நமக்கு தேவையான கிளீனிங் பவுடர் தயார். இதை எப்படி பயன்படுத்துவது.

ஒரு சிறிய கிண்ணத்தில் தேவையான இந்த பவுடரை எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள். இதோடு லெமன் ஜூஸை ஊற்றி பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை சாதாரண நாரில் தொட்டு எந்த பாத்திரத்தை நீங்கள் தேய்த்துக் கொடுத்தாலும், அந்த பாத்திரம் இரண்டே நிமிடத்தில் பளிச் பளிச்சென மாறிவிடும்.

- Advertisement -

இதே பவுடரை கொஞ்சம் லேசாக எடுத்து சிங்குக்கு மேலே தூவி விட்டு, ஒரு நாரை வைத்து தேய்த்துக் கொடுத்தால் உங்கள் சிங்கிள் இருக்கும் கொழ கொழப்பு தன்மை முழுவதுமாக நீங்கி, சிங் சுத்தமாகிவிடும். இதே போல பிளாஸ்டிக் பாத்திரங்களை தேய்க்க கூட இந்த பொடியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து புதினா சட்னி அரைத்து கொடுத்துப் பாருங்கள். ஒரு இட்லி சாப்பிடும் உங்கள் குழந்தை கூட ஐந்து இட்லியை சாதாரணமாக சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும்.

பூஜை ஜாமான்கள் தேய்க்கவும் இந்த பொடியை தாராளமாக பயன்படுத்தலாம். கை வலிக்காமல் எண்ணெய் பிசுக்கு நீங்கவும், கருத்துப் போன பாத்திரங்கள் பளபளப்பாகவும் இந்த ஒரு பவுடர் போதும். தனித்தனியாக ஒவ்வொன்றாக தேடி ஒன்றாக கலந்து பாத்திரம் தேய்க்க வேண்டிய கஷ்டம் இனி கிடையாது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ஒரே ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. மன நிறைவு கொடுக்கும் பட்சத்தில் இந்த குறிப்பை தொடர்ந்து பின்பற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -