- Advertisement -

காலை மற்றும் மாலை வேளைகளில் வரும் சந்தியாக் காலங்கள் இறைவழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த நேரமாகும். அப்படி மாலை வேளை மற்றும் இரவு வேளை என இரண்டிற்கும் இடைப்பட்ட நேரத்தில் வருவதுதான் “நந்தி பகவான்” சிவ வழிபாடு செய்யும் “பிரதோஷ நேரம்” ஆகும். பிரதோஷங்கள் வாரத்தின் அனைத்து கிழமைகளிலும் வருகின்றன. அப்படி வியாழக்கிழமை அன்று வரும் வியாழப்பிரதோஷத்தின் சிறப்பை இங்கு தெரிந்து கொள்வோம்.

மனிதனாக பிறந்து விட்ட அனைவரின் பிறவி தோஷங்களை போக்குவது தான் பிரதோஷம். மற்ற நாட்களிலும், நேரங்களிலும் சிவபெருமானை வழிபடுவதற்கும் இந்த “பிரதோஷ நேரம்” மற்றும் அது வரக்கூடிய கிழமைகளில் வழிபடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. இந்த பிரதோஷங்கள் எந்தெந்த கிழமைகளில் வருகிறதோ அந்த கிழமைகளுக்குரிய நவகிரக நாயகர்களின் அருளும் அன்றைய தினத்தில் நமக்கு கிடைக்கிறது.

- Advertisement -

வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷம் “வியாழப்பிரதோஷம்” என பொதுவாக அழைக்கப்படுகிறது. இக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் சிவ பெருமானை கோவிலுக்கு சென்று வணங்குவதால் நவகிரகங்களில் முழு சுபகிரகமான “குரு பகவானின்” அருளையும் சேர்த்து நமக்கு பெற்று தருகிறது.

வியாழன் பிரதோஷங்கள் வருகிற போது ஜாதகத்தில் குரு பகவானின் கோட்சாரம் சரியில்லாமல் இருப்பவர்கள், குரு பகவான் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பிரதோஷ நேரமான மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள்ளாக சிவன் கோவிலில் இருக்கும் நவகிரக சந்நிதிகளில், மஞ்சள் நிற பூக்களை வைத்து, 27 வெள்ளை கொண்டைக்கடலைகளை நிவேதித்து வணங்க வேண்டும். பின்பு நந்தி பகவான் சிவபெருமான் அம்மன் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியவர்களை வணங்க பொருளாதார பிரச்சனைகள், திருமண தடை, புத்திர பேறு இல்லாமை போன்ற பிரச்சனைகள் நீங்க சிவ பெருமான் மற்றும் குரு பகவான் அருள் புரிவர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவில் பற்றிய பல தகவல்கள்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Viyazha Prathosam vazhipadu and Prathosam palangal in Tamil. Prathosam is a very good day to worship lord Shiva.

- Advertisement -