- Advertisement -
தமிழ் கதைகள் | Tamil stories for reading

நரகாசுரனை கொன்றது உண்மையில் கிருஷ்ணர் அல்ல என்பது தெரியுமா ?

நரகாசுரன் என்ற அசுரனை பகவான் விஷ்ணு அழித்த நாளையே நாம் தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்று கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் நரகாசுரனை கொன்றது பகவான் விஷ்ணு அல்ல. பின் அவனை யார் கொன்றது என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

அசுரர்களை அழிக்க திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை குடைந்து சென்றார் அப்போது அவர் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்த மகன் தான் நரகாசுரன். இவன் பூமாதேவிக்கு பிறந்தாலும் அசுரர் வதம் செய்யும் நோக்கில் பகவான் விஷ்ணு இருந்ததால் இவன் அசுர குணத்தோடு பிறந்தான்.

- Advertisement -

தான் வளர வளர தன்னுடைய உண்மை குணம் இவனிடம் வெளிப்பட ஆரமித்தது. இவன் ஒரு கட்டத்தில் தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் பல துன்பங்களுக்கு ஆளாக்கினான். ஆகையால் அனைவரும் சென்று பகவான் விஷ்ணுவிடம் முறையிட, அவர் இவனை தந்திரமாக கொள்ள முடிவு செய்தார்.

பகவான் விஷ்ணு, நரகாசுரனிடம் போருக்கு வரும்படி அறைகூவல் விடுத்தார். நரகாசுரனும் விஷ்ணுவும் போரிட தொடங்கினர் அப்போது நரகாசுரன் எய்த ஒரு அம்பு விஷ்ணுவின் மேல் பட்டது. இதை சாக்காக வைத்து அவர் மயங்கி விழுவது போல நடித்தார்.

- Advertisement -

இதனை கண்ட சத்ய பாமா, மிகுந்த கோபத்துடன் நரகாசுரனை போருக்கு வரும்படி அழைத்தார். நரகாசுரனும் அவரிடம் போர் புரிந்தான் அப்போது சத்ய பாமாவின் கையால் நரகாசுரன் மடிந்தான். பகவான் விஷ்ணுவே அவனை கொன்றிருக்கலாமே ஏன் அவர் அதை செய்யவில்லை என்ற கேள்வி எழலாம். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நரகாசுரன் தான் செய்த கடும் தவத்தால் தன் தாயை தவிர வேறு யார் கையிலும் தனக்கு இறப்பு இல்லை என்றொரு வரத்தை பெற்றிருந்தான். சத்ய பாமா போருக்கு அழைத்தபோது அவர் பூமா தேவியின் அவதாரம் என்பதை அவன் உணரவில்லை. அதுவே அவன் இறப்பிற்கு காரணமாக அமைந்தது.

இதையும் படிக்கலாமே:
மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை

இறக்கும் தருவாயில் அவன், “நான் மடிந்த இந்நாளை மக்கள் அனைவரும் ஒளிமயமாக கொண்டாடவேண்டும்” என்ற வரத்தை கிருஷ்ணரிடம் பெற்றான். அதன் காரணமாகவே நாம் தீபாவளியை கொண்டாடுகிறோம்.

ஜென் கதைகள், ஆன்மீக கதைகள், சிறு கதைகள், குட்டி கதைகள் என பலவிதமான தமிழ் கதைகளை தினம் தினம் படிக்க எங்களுடைய மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்து எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -