- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

நாம் செய்யும் பாவ புண்ணியத்திற்கு சாட்சியாக இருப்பது யார் யார் தெரியுமா ?

இந்த உலகில் மனிதர்களாகிய நாம் பல விதமான செயல்களை செய்கிறோம். அந்த செயல்கள் நன்மையானவையாகவும், சில செயல்கள் தீமையானவையாகவும் இருக்கின்றன. ஒரு சிலர் தங்கள் செய்யும் செயல்கள் இறைவனோ அல்லது வேறு யாரும் காணவில்லை என்று மகிழ்கின்றனர். வேறு சிலர் இது குறித்து வருந்துகின்றனர். ஆனால் அந்த இறைவனின் அம்சமாக, நமது செயல்கள் அனைத்தையும் காணும் சாட்சியாக இருக்கும் இயற்கையின் சக்திகளை இங்கு காண்போம்.

இரண்டு சந்தியா காலங்கள்

- Advertisement -

விடியற்காலை நேரத்திலும், மாலையில் அந்தி சாயும் நேரத்திலும் வரும் இரண்டு சந்தியா காலங்கள் நமது செயல்களுக்கு சாட்சியாக இருக்கிறது.

வானம்

- Advertisement -

இந்த உலகத்திற்கு கூரை போல் இருப்பதும், சூரிய சந்திர, நட்சத்திரங்களை தன்னிடம் கொண்டிருக்கின்ற வானம் நமது செயல்களுக்கு சாட்சியாக இருக்கிறது.

யமன்

- Advertisement -

உலகத்தில் அனைத்தையும் தனக்குள் அடக்கிக் கொள்வது காலமாகும். அந்த காலனாகிய யமன் நமது செயல்களை கவனிக்கும் சாட்சியாக இருக்கிறார்.

நிலம்

இந்த உலகில் உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்தையும் தாங்கி நிற்கும் பூமியாகிய நிலம் நாம் செயல்களுக்கு சாட்சியாக உள்ளது.

நீர்

உயிர்கள் வாழ நீர் அவசியம். அந்த உயிர்களுக்கு பல வகையில் உதவும் அந்த நீரும் மனிதர்களின் செயல்களுக்கு சாட்சியாக உள்ளது.

நெருப்பு

மனிதர்கள் உண்ணும் உணவை சமைக்க பயன்படும் நெருப்பு, அதே மனிதன் இறந்தவுடன் அவன் உடலை உணவாக கொள்கிறது.தீயவற்றை அழிக்கவும் நல்லவற்றை தரும் நெருப்பு நமது செயல்களுக்கு சாட்சியாக இருக்கிறது.

சூரியன்

உலகிற்கு ஒளியாகவும், நவகிரகங்களுக்கு நாயகனாகவும், உயிர்கள் அனைத்திற்கும் வாழ்வளிப்பவராகவும், தீயவற்றை பொசுக்குபவராகவும் சூரியன் நமது செயல்களுக்கு சாட்சியாக இருக்கிறார்.

சந்திரன்

இரவில் பூமியில் வாழும் உயிர்களுக்கு ஒளி தருபவராகவும், மனிதர்களின் மனங்களை குளிர்விப்பவர்களாகவும் இருக்கும் சந்திரனும் நமது செயல்களுக்கு சாட்சியாக இருக்கிறார்.

இதயம்

மனிதர்கள் நம் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் இருக்கும் இதயம், நம் செயல்களுக்கு சாட்சியாக இருந்து அனைத்தையும் கவனிக்கிறது.

பகல் மற்றும் இரவு

இந்த உலகில் ஒவ்வொரு தினமும் வழக்கம் மாறாது வரும் பகல் மற்றும் இரவு வேளைகள் நமது செயல்களுக்கு சாட்சியாக உள்ளது.

தர்மம்

எல்லாவற்றிற்கும் மேலாக நாம் செய்யும் தர்ம காரியங்கள் நமது செயல்களை என்றென்றும் பறைசாற்றும் சாட்சியாக உள்ளது.

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் ஆன்மீக சார்ந்த பல அறிய விடயங்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -