- Advertisement -
- Advertisement -

குரு பார்க்க கோடி நன்மை என்று கூறி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். நாம் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பான முறையில் குரு என்று யாராவது ஒருவர் இருப்பார்கள். படிப்பு ரீதியாக குரு, தொழில் ரீதியாக குரு, ஆன்மீக அடிப்படையில் குரு, வாழ்க்கையை வழி நடத்துவதற்கு உதவிய குரு என்று பல குருமார்கள் நம்முடைய வாழ்க்கையில் இருப்பார்கள். அப்படிப்பட்ட குருமார்களை நாம் என்றுமே மறக்கக்கூடாது. நம்மால் இயன்ற அளவிற்கு அவர்களை வணங்கி அவர்களிடம் இருந்து வாழ்த்துக்களை பெற்றோம் என்றால்தான் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமையும். அந்த வகையில் ஆன்மீக ரீதியாக நாம் யாரை குருவாக நினைத்து இருக்கிறோமோ அவர்களுக்கு வியாழக்கிழமை அன்று எந்த முறையில் பூஜை செய்தால் யோகம் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

யோகம் தரும் குருபூஜை

வியாழக்கிழமை என்பது குருபகவானுக்குரிய கிழமை என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட வியாழக்கிழமை அன்று நாம் யாரை குருவாக நினைத்து இருக்கிறோமோ அவர்களை நினைத்து பூஜை செய்தோம் என்றால் அவர்களின் அருளால் நாம் நினைத்தது நமக்கு நடக்கும். மேலும் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு யோகங்கள் உண்டாகும். வாழ்க்கையில் எந்த சுபகாரியம் தடைப்பட்டு இருந்தாலும் அந்த சுப காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடக்கும் என்று கூறப்படுகிறது. இப்படி பல பலன்களை கூறிக் கொண்டே செல்லலாம். நம்முடைய வீட்டில் எளிமையான முறையில் எப்படி குருபூஜை செய்வது என்பதை இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

முதல் நாள் புதன்கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்து கொள்ளுங்கள். வீட்டு நிலை வாசலையும் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து நிலை வாசலில் மாவிலை தோரணத்தை கட்டி விடுங்கள். மறுநாள் வியாழக்கிழமை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக தலைக்கு குளித்து முடித்துவிட்டு வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொள்ளுங்கள். இப்பொழுது வீட்டு பூஜை அறைக்கு வந்து ஒரு மனைப் பலகையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் மஞ்சள் குங்குமம் வைத்து பச்சரிசி மாவால் கோலம் போட்டுக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு மஞ்சள் துணியை விரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் யாரை குருவாக நினைக்கிறீர்களோ அவர்களின் படத்தை அந்த மனைப்பலகை மேல் வைக்க வேண்டும். உதாரணமாக மஹா பெரியவர், சாய்பாபா, ஆதிசங்கரர், ராகவேந்திரர் போன்ற குருமார்களில் யாராவது ஒருவரை நாம் மானசீகமாக குருவாக ஏற்றுக்கொண்டு அவர்களின் படத்தை வைக்க வேண்டும். அந்த படத்திற்கு முன்பாக இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு வெற்றிலையை வைத்து அதற்கு மேல் மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக சர்க்கரைப் பொங்கலை வைக்க வேண்டும். மேலும் முதல் நாள் இரவே 108 என்ற எண்ணிக்கையில் கொண்டை கடலையை ஊற போட்டு அந்த கொண்டை கடலையை மாலையாக கோர்த்து நாம் வைத்திருக்கும் குருவிற்கு சாற்ற வேண்டும். அடுத்ததாக மலர்களை வைத்து பிள்ளையாரை முதலில் வழிபாடு செய்து விட்டு, பிறகு துளசி, வில்வம் வாசனை நிறைந்த மலர்கள் இவற்றை வைத்து நாம் குருவாக வைத்திருக்கும் குருவின் அஷ்டோத்திரம் இருக்கும் பட்சத்தில் அந்த அஷ்டோத்திரத்தை படித்து பூஜை செய்யலாம்.

அப்படி எதுவும் தெரியாது என்பவர்கள் குருவின் பெயரை கூறி அர்ச்சனை செய்யலாம். உதாரணத்திற்கு ராகவேந்திரர் என்று வைத்துக் கொண்டால் “ஓம் ஸ்ரீ ராகவேந்திரரே போற்றி” என்று கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி அர்ச்சனை செய்து முடித்த பிறகு நாம் வழிபட்ட குருவை 108 முறை சுற்றிவர வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். குருவிற்கு மாலையாக போட்ட கொண்டைக்கடலையை மறுநாள் பசுமாட்டிற்கு தானமாக தந்து விட வேண்டும். அன்று முழுவதும் இந்த குருபூஜை செய்த இடம் அப்படியே இருக்கட்டும். மறுநாள் அதை எடுத்து எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் வைத்து விடலாம்.

- Advertisement -

இந்த முறையில் தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் அல்லது 12 வாரங்கள் யார் ஒருவர் குருபூஜை செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நன்மைகள் உண்டாகும். யோகங்களை பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:கடன் நீங்க பஞ்சமி வழிபாடு

குரு அருள் கிடைத்தால் வாழ்க்கையில் அனைத்தையும் சாதித்து விடலாம் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட குருவருளை பெறுவதற்குரிய எளிமையான பூஜையாக இந்த பூஜை திகழ்கிறது. முழு மனதோடு குருபூஜையை செய்து குருவின் அருளை பெற்று வாழ்க்கையில் சிறப்பான யோகங்களை பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -