- Advertisement -
- Advertisement -

வீட்டில் எல்லோருக்கும், மலை போல் குவியல் குவியலாக பணத்தை சேர்த்து வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் என்னமோ தெரியவில்லை. நாம் எந்த அளவுக்கு பணத்தை சேர்க்க வேண்டும் என்று நினைக்கின்றோமோ, அந்த அளவுக்கு செலவுக்கு மேல் செலவு வருகிறது. பத்து ரூபாய் பணத்தை கூட எடுத்து சேமிப்பில் வைக்க முடியவில்லை.

இதற்கு என்ன காரணம் இருந்தாலும் பரவாயில்லை. அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். சம்பாதிக்கும் ஆர்வத்தை கைவிடக்கூடாது. பணத்தை சேர்க்கும் ஆசையை விட்டு விடக் கூடாது. பணத்தின் மேல் நீங்கள் எந்த அளவுக்கு காதலாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அந்த பணமானது உங்களை நெருங்கி வரும். என்றைக்குமே என்னடா வாழ்க்கை இது, என்று வாழ்க்கையையும், பணத்தையும் வெறுத்து விடாதீர்கள்.

- Advertisement -

நாம் விரும்புவது நிச்சயம் நம்மை வந்து சேரும். நாம் வெறுப்பது நிச்சயம் நம் கையை விட்டு போய்விடும் இதுதான் இந்த பிரபஞ்சத்தில் மறைந்திருக்கும் உண்மை சூட்சமம். இதை புரிந்து கொள்பவர்கள் சந்தோஷமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பணம் சேர பரிகாரம்

அந்த வகையில் இன்று பணத்தை சேர்க்கக்கூடிய மகாலட்சுமி வழிபாட்டை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாளைய தினம் 27.9.2024 வெள்ளிக்கிழமை சுக்கிர ஜெயந்தியும் இருக்கிறது. நாளை சுக்கிர பகவானின் பிறந்தநாள். இந்த நாளில் சுக்கிர பகவானையும் மகாலட்சுமியும் நினைத்து நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள் நமக்கு 100 மடங்கு பலன் கிடைக்கும்.

- Advertisement -

நாளை உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த பரிகாரத்தை செய்யலாம். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு கட்டாயம் வெள்ளிக்கிழமை பூஜை செய்திருப்பீர்கள், அதோடு இந்த பரிகாரத்தை செய்ய கூடுதலாக 5 நிமிடம் தேவைப்படும். கையில் 10 ரூபாயை வைத்துக்கொள்ள வேண்டும். ‘ஓம் ஹ்ரீம் க்லீம் மகாலட்சுமியை நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு, இந்த பத்து ரூபாய் பணம், கூடிய விரைவில் பல லட்ச ரூபாய் பணமாக மாற வேண்டும் என்று வேண்டுதல் வையுங்கள்.

பிறகு கையில் இருக்கும் 10 ரூபாயை எடுத்து பர்ஸில் வைக்கலாம். பீரோவில் வைக்கலாம் இந்த 10 ரூபாயை செலவு செய்யாதீங்க. இந்த பத்து ரூபாய் தான் உங்களுக்கு பல மடங்கு பணத்தை ஈர்த்துக் கொடுக்கப் போகிறது. நாளையில் இருந்து அடுத்தடுத்து வரக்கூடிய நாட்களில் கூட உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த பத்து ரூபாய் பணத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டு மகாலட்சுமியை நினைத்து ‘நிறைய பணம் எனக்கு வரப்போகிறது’ என்று மனதார நினைத்துக் கொண்டே இருந்தால் உங்களை நோக்கி நிறைய பணம் வர தொடங்கும்.

இதையும் படிக்கலாமே: பெண்களின் முன்னேற்றத்திற்கு சொல்ல வேண்டிய மந்திரம்

கட்டுக்கட்டாக குவியல் குவியலாக பிறகு மலைபோல் பணம் வீட்டில் சேர தொடங்கும். நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும். நாளைய தினம் புரட்டாசி மாதம் வந்திருக்கும் இரண்டாவது வெள்ளிக்கிழமை சுக்கிர ஜெயந்தி இருப்பதால் இந்த நாளுக்கு சக்தி அதிகம் நம்பிக்கை உள்ளவர்கள் தவறாமல் இந்த ஆன்மீகம் எளிமையான பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -