- Advertisement -
- Advertisement -

அனுமனைப் போல ஒரு பலம் நமக்கு இருந்துவிட்டால், அனுமனின் ஆசிர்வாதம் நமக்கு இருந்துவிட்டால், அந்த ஹனுமனின் சீடனாக நாம் மாறிவிட்டால், வாழ்க்கையில் நாம் எதற்குமே கவலைப்பட வேண்டாம். துணிச்சல், அறிவு, ஞானம், கல்வி, பலம், பொறுமை, சிந்தனை, பாசம், தெளிவு, ஆரோக்கியம் என்று வாழ்க்கையில் நமக்கு தேவையான அத்தனை விஷயங்களும் கிடைக்கக்கூடிய ஒரே இடம் அனுமனின் பாதம் மட்டும்தான்.

இந்த அனுமனை மூலம் நட்சத்திரத்தன்று வழிபாடு செய்வது சிறப்பு. வியாழக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய மூல நட்சத்திரத்தன்று வழிபாடு செய்வது இரட்டிப்பு சிறப்பு. நாளைய தினம் 12-06-2025 வியாழக்கிழமையோடு சேர்ந்து, மூலம் நட்சத்திரம் வந்திருக்கிறது. இந்த நாளை நாம் தவறு விடலாமா. நாளைய தினம் செய்ய வேண்டிய ஹனுமான் வழிபாடு, சொல்ல வேண்டிய ஹனுமன் மந்திரம் என்ன இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

மிக மிக சுலபமான வழிபாடு இது. எல்லோருக்கும் இது தெரியும். ஆனால் இந்த வழிபாட்டை தவறாமல் நாளைய தினம் செய்ய செய்வதில்தான் அதிசூட்சமமே மறைந்திருக்கிறது. நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். 27 வெற்றிலை வாங்கிக் கொள்ளுங்கள். வெற்றிலையை சுருட்டி மஞ்சள் நூலில் மாலையாக கட்டி, அனுமனுக்கு சாத்தி வேண்டிய வரங்களை கேட்டால் அது உங்களுக்கு அப்படியே கிடைத்துவிடும்.

சில பேர் வெற்றிலையோடு நடுவில் ஒரு கலிபாக்கம் வைத்து சுருட்டி மாலை கட்டி போடுவார்கள். உங்களுக்கு எது வசதியாக படிக்கிறதோ, அதை நீங்கள் செய்து கொள்ளலாம். முடிந்தால் அனுமனுக்கு வெண்ணெய் வாங்கி சாற்றி வழிபாட்டை மேற்கொள்ளலாம். வெண்ணெய் எப்படி உருகி வழிகிறதோ, அதேபோல உங்களுடைய கஷ்டங்களும் உருகி கரைந்து காணாமல் போகும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

“ஓம் ஹம் ஹனுமந்தே நமஹ” என்ற இந்த மந்திரத்தை ஹனுமன் சன்னிதானத்தில் அமர்ந்து 108 முறை உச்சரிப்பது அதிசிறப்பு வாய்ந்த பலனை தரும். உங்களால் முடியும் என்றால் 108 துண்டு சீட்டுகளில் “ஸ்ரீ ராம ஜெயம்” எழுதி மாலையாக கட்டி அனுமனுக்கு போடுங்கள். நாளைய தினம் உங்களால் என்னென்ன வழிபாட்டை அனுமனுக்கு செய்ய முடிகிறதோ அதை எல்லாம் செய்து அனுமனை மனநிறைவோடு வழிபாடு செய்தால் அந்த ஹனுமன் உங்களுக்குத் துணையாக, உங்கள் ஆயுள் முழுதும் பயணம் செய்வார்.

இதையும் படிக்கலாமே: கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ அரச இலை பரிகாரம்

ஹனுமனை நம்பியவர்கள் என்றுமே கைவிடப்பட்டது கிடையாது. சில கிரகங்களால் நமக்கு பாதிப்பு ஏற்படும். கெட்ட நேரம் கூட வரும். குறிப்பாக சனி பகவானால் பிரச்சனை, ராகு கேதுவால் பிரச்சனை என்றாலும் கவலை படாதீங்க. மனதார அனுமனை நாளைய தினம் வேண்டி வழிபாடு செய்யுங்கள். எவ்வளவு பெரிய பிரச்சனையும் தூசு போல உங்களை விட்டு விலகும். பிரச்சினை எதிர்கொள்ளும் மன தைரியம் உங்களுக்குள் பிறக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -