
இன்று 2-7-2025 புதன்கிழமையோடு சேர்ந்து வளர்பிறை அஷ்டமி திதி பிறக்கவிருக்கிறது. இன்று மதியம் 3:00 மணிக்கு பின்பு வளர்பிறை அஷ்டமி திதி ஆரம்பம். நாளை 3-7-2025 வியாழக்கிழமை மாலை 4:30 மணியோடு அஷ்டமி திதி நிறைவடைகிறது. இந்த வளர்பிறை அஷ்டமி திதியில் செய்ய வேண்டிய ஒரு சூட்சமமான வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இந்த வழிபாட்டை எவர் ஒருவர், 8 அஷ்டமி திதியில் செய்து முடிக்கிறீர்களோ, அவர்களுடைய வாழ்க்கையில் தன லாபம் மேலும் மேலும் உயரும். வியாபாரம் வேலையில் கை நிறைய பணம் சம்பாதிக்க துவங்கி விடுவீர்கள். அஷ்டலட்சுமிகளின் அருட்கடாட்சமும் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும். இத்தனை நன்மைகளையும் நமக்கு தரக்கூடிய அந்த வளர்பிறை அஷ்டமியில், அஷ்டலட்சுமிகள் வழிபாட்டை வீட்டில் இருந்தபடியே எப்படி மேற்கொள்வது, ஆன்மீகம் சார்ந்த தகவல் இந்த பதிவில் உங்களுக்காக.
வளர்பிறை அஷ்டமி திதி வரும்போது, சுக்கிர ஹோரையில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். புதன்கிழமை இரவு 7 டு 8, சுக்கிர ஹோரையும், வளர்பிறை அஷ்டமி திதியும் சேர்ந்து இருக்கிறது. வியாழக்கிழமை காலை 9 டு 10 சுக்கிர ஹோரையும், வளர்பிறை அஷ்டமி திதியும் சேர்ந்து இருக்கிறது. இந்த இரண்டு மணி நேரத்தில் உங்களுக்கு எந்த நேரம் சௌகரியமாக இருக்கிறதோ, அந்த நேரத்தை தேர்ந்தெடுத்து இந்த வழிபாட்டை வீட்டில் இருந்தபடி செய்யலாம்.
பூஜை அறையை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். ஒரு அஷ்டலட்சுமி திருவுருவப்படம் இருந்தால் சிறப்பு. இல்லை என்றால் மகாலட்சுமியின் திரு உருவப்படத்திற்கு முன்பு ஒரு வெள்ளை துணியை விரித்து விடுங்கள், அதன் மேலே சின்ன சின்னதாக 8 மண் அகல் விளக்குகள் வைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, கட்டாயம் நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி அஷ்டலட்சுமிகளையும், வீட்டிற்குள் அழைத்து, அஷ்டலட்சுமிகளின் அருளையும் பெற வேண்டும்.
மனதார கால பைரவரையும் வழிபாடு செய்து கொள்ளுங்கள். குலதெய்வத்தையும் வழிபடுங்கள். தீப தூப ஆராதனை காண்பிக்க வேண்டும். வாசம் நிறைந்த ஊதுவத்தி ஏற்ற வேண்டும். உங்களால் முடிந்த நெய்வேதியம் 2 வாழைப்பழம் வைத்து, இந்த பூஜையை மன நிறைவோடு செய்து, பிரார்த்தனை செய்து கொண்டால் உங்களுடைய வேண்டுதலானது கூடிய விரைவில் பலிக்கும்.
வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான வேண்டுதல் வைக்க வேண்டும், நல்ல வியாபாரம் அமைய வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், நிறைய லாபம் கொட்ட வேண்டும், வேலையில் முன்னேற்றம் வரவேண்டும். வாழ்க்கையில் ஓஹோ என்று முன்னுக்கு வரவேண்டும் என்று நல்லபடியாக பிரார்த்தனை செய்து கொண்டு, வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
வெள்ளை நிற துணி என்றாலே அந்த இடத்தில் சுக்கிரன் வந்து விடுவார். நெய் தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள். இந்த நேரத்தில் நீங்கள் என்ன நல்ல வரங்கள் கேட்டாலும், அது உங்களுக்கு உடனடியாக கிடைக்கும். 8 வளர்பிறை அஷ்டமி திதியில், இதே போல வீட்டிலிருந்தபடியே வழிபாடு செய்தால் நிச்சயம் வாழ்வில் வளமான முன்னேற்றம் இருக்கும் என்பது நம்பிக்கை.
இதையும் படிக்கலாமே: நிரந்தர பணவரவு உண்டாக
இந்த வளர்பிறை அஷ்டமி திதியில் வீட்டில் இருந்தபடியே இந்த வழிபாட்டை செய்துவிட்டு, தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் கோவிலுக்கு சென்று எப்போதும் போல நீங்கள் மிளகு தீபம் போட்டு வழிபாட்டை மேற்கொள்ளலாம். எந்த பிரச்சனையும் கிடையாது. இந்த அதி அற்புதம் வாய்ந்த தகவலை இந்த நன்னாளில் உங்களோடு பகிர்ந்து கொண்டதில், மகிழ்ச்சியுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.