- Advertisement -

நிரந்தர பணவரவு உண்டாக

- Advertisement -

எவ்வளவுதான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் கையில் தங்கவில்லை என்று புலம்புபவர்களும், சம்பாதித்த பணம் மறுநாளே காலியாகி ஒன்றும் இல்லாமல் போய்விட்டது என்று கஷ்டப்படுபவர்களும், குடும்பத்தை நடத்துவதற்கு போதுமான அளவு பணவரவு இல்லை என்று வருத்தப்படுபவர்களும் இந்த உலகத்தில் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய பணவரவை அதிகரித்துக் கொள்வதற்கும் வீண் விரயத்தை குறைப்பதற்கும் பலவிதமான முயற்சிகளை செய்தாலும் அந்த முயற்சியோடு ஒரு பரிகாரத்தையும் சேர்த்து செய்யும் பொழுது விரைவில் அவர்களுடைய முயற்சிகள் வெற்றியடைந்து நிரந்தர பண வரவு உண்டாவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நிரந்தர பணவரவு உண்டாக

செல்வ செழிப்புடன் ஒருவர் வாழ வேண்டும் என்றால் அவர் சம்பாதிக்க கூடிய பணமானது அவரிடம் சேமிப்பாக சேர வேண்டும். அப்பொழுதுதான் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும். அப்படிப்பட்ட பணத்தை சேர்த்து வைப்பதற்குரிய வாய்ப்புகள் அனைவருக்குமே அமைந்து விடாது. ஒரு சிலருக்கு சம்பாதிக்கும் பணத்தைவிட அதிக அளவு செலவுகள் இருக்கும், பலவிதமான கடன் பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு இருப்பார்கள் அல்லது திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் வாங்கிய சம்பளம் மருத்துவ செலவிற்கே பற்றாமல் போவதற்குரிய வாய்ப்புகள் கூட உண்டாகும். இப்படி எப்பேர்ப்பட்ட பணம் தொடர்பான பிரச்சனைகளாக இருந்தாலும் பணத்தை சேர்த்து வைக்க முடியாத அளவிற்கு சூழ்நிலைகள் உண்டானாலும் ஒரே ஒரு ரூபாயை வைத்து நாம் செய்யக்கூடிய பரிகாரம் அவை அனைத்தையும் தவிடு பொடியாக்கும்.

- Advertisement -

இந்த ஒரு ரூபாய் பரிகாரத்தை நாம் வெள்ளிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். இதற்கு ஒரே ஒரு ரூபாய் நாணயம் மட்டும் இருந்தால் போதும். வேறு எதுவும் தேவை கிடையாது. வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துக் கொள்ளுங்கள். முதல் நாளே வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து தயாராக தான் வைத்திருப்போம். எப்பொழுதும் எப்படி வெள்ளிக்கிழமை பூஜை செய்வீர்களோ அதேபோல் பூஜை செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு ஒரே ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அதை பன்னீர் ஊற்றி சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து ஒரு தட்டில் வைத்து பூஜையில் வைத்து விடுங்கள். இப்பொழுது நாம் எப்பொழுதும் போல் கற்பூர தீப தூப ஆராத்தி காட்டுவோம் அல்லவா? அதே போல் காட்டும் பொழுது இந்த ஒரு ரூபாய் நாணயத்திற்கும் காட்ட வேண்டும். தொடர்ச்சியாக 11 நாட்கள் இந்த ஒரு ரூபாய் நாணயத்திற்கு சாம்பிராணி ஊதுபத்தி தூப தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

11 நாள் வழிபாடு நிறைவு செய்த பிறகு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்தில் இருக்கும் உண்டியலில் சேர்த்து விட வேண்டும். அவ்வாறு சேர்க்கும் பொழுது பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் விலக வேண்டும் என்றும் வீண் விரயங்கள் குறைய வேண்டும் என்றும் விநாயகர் பெருமானிடம் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விநாயகப் பெருமானின் அருளால் நமக்கு பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும், பணத்தை சேமிப்பாக மாற்றுவதற்குரிய வழிகளும் உண்டாகும், வீண் விரயங்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: ஜூலை மாதம் கூற வேண்டிய மந்திரம்

பணவரவை அதிகரிக்க வேண்டும் வீண் விரயத்தை குறைக்க வேண்டும் என்று அதிக அளவில் பணத்தை செலவு செய்யாமல் ஒரே ஒரு ஒரு ரூபாயை வைத்து இப்படி ஒரு எளிமையான பரிகாரத்தை முழு நம்பிக்கையோடு செய்து பாருங்கள். விநாயகப் பெருமானின் அருளால் வீண் விரயங்கள் குறைந்து நிரந்தர பண வரவு உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்