
இந்த குரு பகவான் நல்ல கிரகம் தான். அவர் நமக்கு கோடான கோடி நல்ல பலன்களை வாரி வழங்கிக் கொண்டே தான் இருப்பார். குரு பார்க்க கோடி நன்மை என்று கூட சொல்லுவார்கள். நம் ஜாதக கட்டத்தில் குரு சரியாக இருந்தால், நம் வீட்டில் பணமும் தங்கமும் சீராக சேரும் என்றும் சொல்லுவார்கள். ஆனால் இந்த குருபகவான் செய்வதை தடுப்பதற்காகவே அக்கம் பக்கத்து வீட்டில் அமர்ந்திருக்கும் மற்ற கிரகங்கள் சில வேலைகளை செய்யும்.
ஆக குரு பகவான் கொடுக்கக் கூடிய நல்ல விஷயங்கள் நம் கையில் வந்து சேராது. இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பது எப்படி. எல்லா கிரகங்களும் கண்டு கொஞ்சம் பயப்படக்கூடிய தெய்வம் என்றால் அது கனநாதன் விநாயகர் தான். அந்த விநாயகப் பெருமானுக்கு உரிய சதுர்த்தி திதி நவராத்திரியில், வியாழக்கிழமை அன்று வந்திருக்கிறது. இந்த நாளுக்கு அதீத சக்தி உண்டு.
இந்த நாளில் விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் நிச்சயம் உங்களுடைய கஷ்டங்கள் தீரும். வியாபாரத்தில் இருக்கும் நஷ்டம் விலகும். வேலையில் இருக்கும் தடை நீங்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். அதுவும் வளர்பிறையில் வந்திருக்கக் கூடிய சதுர்த்தி திதி என்பதால் உங்கள் வாழ்க்கை வளமாக விநாயகர் உங்களுக்கு வரங்களை வாரி வாரி கொடுப்பார்.
சரி இந்த நாளில் எந்த ஒரு குறிப்பிட்ட பரிகாரத்தை செய்தால் அந்த குருபகவான் கொடுக்கக் கூடிய நல்ல விஷயங்களை நாம் முழுமையாக அடையலாம். குரு பகவான் கொடுப்பது எதுவும் தடையாக நிற்கக்கூடாது என்றால், நாளை விநாயகரை எப்படி கும்பிடுவது ஒரு சின்ன சின்ன ஆன்மீகம் சார்ந்த டிப்ஸ் இந்த பதிவில் உங்களுக்காக.
நாளை மாலை விநாயகர் கோவிலுக்கு போங்க. கொஞ்சம் அருகம்புல் வாங்கிக் கொண்டு செல்லுங்கள். கூடவே 1/2 கிலோ, 1 கிலோ லட்டு, அல்லது பூந்தி வாங்கிக்கோங்க. பேக்கரியில் இருந்து வாங்கிக்கோங்க. உங்க நிதி நிலைமைக்கு தகுந்தபடி வாங்கிக்கோங்க. மஞ்சள் நிறத்தில் இருக்கும் லட்டு அல்லது பூந்தி வாங்குவது சிறப்பு.
இதைக் கொண்டு போய் விநாயகர் பாதத்தில் வைத்து, உங்களுடைய பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். மீண்டும் அந்த பிரசாதத்தை வாங்கி கொண்டு வந்து, கோவிலுக்கு வெளியில் யாசகம் கேட்பவர்கள் இயலாதவர்கள், முதியவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு தானமாக கொடுங்கள். அல்லது குழந்தைகளுக்கு அந்த பிரசாதத்தை தானமாக கொடுங்கள்.
இதையும் படிக்கலாமே: புரட்டாசி வியாழன், பெருமாள் பரிகாரம்
உங்களுக்கு குருவின் திருவருள் கட்டாயம் கிடைத்துவிடும். குரு கொடுப்பதை யாராலும் தட்டிப் பறிக்க முடியாது. அதாங்க எந்த கிரகமும் உங்களுடைய முன்னேற்றத்திற்கு தடையாக வந்து நிற்காது. இந்த எளிய பரிகாரத்தை நம்புறீங்களா? விநாயகர் பிடித்தவங்களுக்கு இந்த பரிகாரமும் பிடிக்கும். பரிகாரத்தை செய்றவங்களுக்கு குருபகவானையும் பிடித்துவிடும் இவ்வளவுதான். ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் நல்லா இருப்பீங்க.