இது புரட்டாசி மாதம். புரட்டாசி மாதத்தில் வரவிருக்கும் அதிசக்தி வாய்ந்த வியாழக்கிழமை அன்று செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வியாழக்கிழமை குருவுக்கு உரிய நாள். குபேரருக்கு உரிய நாள்.
இந்த நாளில் இந்த புரட்டாசி மாதத்தில் நாம் செய்யும் எளிமையான பரிகாரம், நம்மை வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும். நீங்கள் செல்வ செழிப்பில் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் வாழ்க்கையில் ஆயிரம் தடை கற்கள் வந்து முட்டுக்கட்டையாக நிற்கிறது.
அதிலிருந்து விடுபட, பெரிய போராட்டமே நடத்தி வரீங்க அப்படின்னா, அந்த போராட்டத்தின் ஒரு அங்கமாக இந்த வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடை கற்கள், படி கற்களாக மாறும்.
வியாழக்கிழமை பெருமாள் வழிபாடு
அந்த திருப்பதி பெருமாளுக்கே கடன் கொடுத்தவர்தான் இந்த குபேரன். குபேரருக்கு சொந்தமாக இருக்கும் வியாழக்கிழமையில், மாலை நேரத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வியாழக்கிழமை மாலை 5:30 மணியிலிருந்து 7:00 மணி வரை குபேர நேரம் என்று சொல்லுவார்கள். இந்த நேரத்தில்தான் நாம் பெருமாளை வழிபட வேண்டும். எப்படி தெரியுமா?
புரட்டாசி மாதம் வந்திருக்கும் வியாழக்கிழமை அன்று மாலை நேரத்தில், பூஜையறையில் ஒரு நெய் தீபம் ஏற்றி வைப்பது சிறப்பு. ஒரு பச்சை நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பெருமாளுக்கு பிடித்த பச்சை கற்பூரம், ஏலக்காய், லவங்கம் இந்த மூன்று பொருட்களையும் வைக்க வேண்டும்.
இதை கொஞ்சம் இடித்து வைத்தாலும் தவறு கிடையாது. அதில் இருக்கும் வாசம் இன்னும் அதிகமாக வெளியே வரும். பச்சை நிறம் என்பது குபேரருக்கு உரிய நிறம். புதன் பகவானுக்கு உரிய நிறம். ஆகவேதான் பச்சை துணியை பயன்படுத்த வேண்டும். புரட்டாசி மாதம் புதன் கிரகத்துக்கு உரிய மாதம்.
இப்படி வாசம் நிறைந்த, பண வசியம் நிறைந்த முடிச்சை தயார் செய்து, பெருமாள் பாதத்தில் வைத்து எடுத்து, உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு வேண்டுதல் வைக்க வேண்டும். உங்களுக்கு என்ன பண கஷ்டம் இருக்குது. அந்த பண கஷ்டத்திலிருந்து விடுபட பிரார்த்தனை வைக்கலாம்.
அல்லது நல்ல வேலை கிடைக்க வருமானம் பெறுக, வியாபாரம் சிறக்க இப்படி என்ன வேண்டுதல் வைத்தாலும் சரி, பணம் சம்பந்தப்பட்ட வேண்டுதல்கள். மனதார வேண்டுதலை வைத்துவிட்டு அந்த முடிச்சை கொண்டு போய் உங்களுடைய பீரோவிலோ அல்லது வியாபாரம் செய்யும் கல்லாப்பெட்டியிலோ வைக்கலாம்.
வியாபாரம் செய்யக்கூடிய இடத்திலும் இதுபோல பரிகாரத்தை செய்யலாம். தவறு கிடையாது. நீங்கள் பரிகாரத்தை எந்த இடத்தில் செய்தாலும் அந்த பச்சை நிற, பணவசிய முடிச்சை துணியை வியாழக்கிழமை, குபேர நேரத்தில் பணப்பெட்டியில் வைக்கும் போது, உங்களுக்கு இருக்கக்கூடிய பணத்தடை விலகும் என்பது நம்பிக்கை. இவ்வளவுதான் பரிகாரம்.
இந்த பொருட்களை எல்லாம் எப்போதும் மீண்டும் மாற்றுவது. அதனுடைய வாசம் இருக்கும் வரை பீரோவுலையே அந்த பொருட்கள் இருக்கட்டும். வாசம் நீங்கி விட்டால் மீண்டும் ஒரு வியாழக்கிழமை இதே போல இந்த பரிகாரத்தை செய்து இந்த முடிச்சை பீரோவில் வைக்கும் போது, உங்கள் வீட்டில் தரித்திரம் அண்டாமல் இருக்கும்.
இதையும் படிக்கலாமே: நவராத்திரி மூன்றாம் நாள் வழிபாடு
லட்சுமி கடாட்சம் எப்போதும் நிலையாக தங்கும். கையில் பணம் இல்லை என்ற நிலைமைக்கு நீங்கள் தள்ளப்பட மாட்டீர்கள். பெருமாளின் அருளால் அனைவருக்கும் லட்சுமி கடாட்சம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.