
ஒரு மனிதனின் வாழ்க்கையில் பண நெருக்கடி வரக்கூடாது, மன நெருக்கடியும் வரக்கூடாது, என்றால் அந்த நாராயணனை வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப முக்கியம். நாராயணனின் நம்பி வேண்டுதல் வைத்து வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் இல்லை. இன்று 5.12.2024 வியாழக்கிழமை திருவோண நட்சத்திரம் இருக்கிறது.
இந்த நாளில் எம்பெருமான் வழிபாட்டை செய்பவர்களுக்கு நிச்சயமாக கஷ்டங்கள் வரவே வராது. நீங்கள் கேட்ட வரங்களையும் உடனே கொடுக்கக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த நாள் இந்த நாள். இன்று மாலை பூஜையாறையில் விளக்கு ஏற்றி என்ன மந்திரத்தை சொல்ல வேண்டும், என்ன பரிகாரத்தை செய்தால் பண கஷ்டத்தில் இருந்து சுலபமாக வெளிவர முடியும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
இன்று மாலை 6:00 மணிக்கு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். பெருமாள் திருவுருவப்படத்திற்கு பூக்களால், துளசி இலைகளால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். ‘ஓம் நமோ வெங்கடேசாய நமோ நமஹ!’ என்ற மந்திரத்தை மனமுருகி சொல்ல வேண்டும். பிறகு ஒரு பச்சை நிற துணி எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் 1 ஸ்பூன் வெந்தயத்தை வைத்து சின்ன முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு உங்களுக்கு இருக்கும் பணக்கஷ்டங்கள் எல்லாம் விலகி செல்ல, மன கஷ்டம் விலகி செல்ல பிரார்த்தனை வைக்க வேண்டும். குறிப்பாக தொல்லை கொடுத்து வரும் கடன் சுமை எது, அந்த கடனை சீக்கிரம் திருப்பி தருவதற்கு உண்டான வழியை காட்டு எம்பெருமானே என்று பிரார்த்தனை செய்து கொண்டு, இந்த முடிச்சை பெருமாளின் பாதத்தில் வைத்துவிட்டு, 108 முறை ‘ஓம் நமோ வெங்கடேசாய நமோ நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லிவிட்டு அந்த முடிச்சை எடுத்து பீரோவில் வைத்து விட வேண்டும்.
இன்று தொடங்கி 48 நாட்களுக்குள் உங்கள் பண பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அப்படி பண பிரச்சனை தீரவில்லை என்றாலும் மனம் தளரக்கூடாது. முயற்சிகளை கைவிடக்கூடாது. தினமும் விடாமல் பெருமாள் பாதத்தை பற்றி கொள்ளுங்கள். ஆனால் பீரோவுக்குள்ளே வைத்திருக்கும் முடிச்சை மட்டும் எடுத்து அந்த வெந்தயத்தை கால் படாத இடத்தில் தூவி விட்டு விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?
இந்த எளிமையான பரிகாரம் அந்த பாலாஜியின் அருளை நமக்கு பரிபூரணமாக பெற்று தரும், அந்த திருப்பதி ஏழுமலையானின் அருளை நமக்கு முழுமையாக பெற்று தரும். நம்பிக்கையோடு இன்று இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு இருக்கும் கஷ்ட நஷ்டங்கள் குறைய பிரார்த்தனை வைத்து இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.